வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ள தொழிற்சங்கங்கள்!!

25 பங்குனி 2025 செவ்வாய் 07:00 | பார்வைகள் : 2362
அரசில் வரி ஏய்ப்பு முறையினரை எதிர்த்து தொழிற்சங்கங்கள் ஏப்ரல் 3 ஆம் திகதி வேலை நிறுத்தம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
CGT, UNSA, FSU மற்றும் Solidaires ஆகிய தொழிற்சங்கங்கள் தங்களது ஊழியர்களை இந்த வேலை நிறுத்தத்துக்கு அழைத்துள்ளனர். ”கறுப்பு ஆண்டு’ ("année noire") என தெரிவிக்கப்படும் இந்த வேலை நிறுத்தத்தினால் பல்வேறு தொழிற்துறைகளை முடக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
‘தொழிலாளர்களின் முதுகில் அரசு ‘போர் பொருளாதாரத்தை’ சுமத்துவதாகவும், தொழிலாளர்கள் பல்வேறு வழியகளில் தியாகம் செய்யப்படுவதை நாம் அனுமதிக்க மறுக்கிறோம்!” என தொழிற்சங்கத்தினர் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.