Paristamil Navigation Paristamil advert login

வீடு காணமல் போன அதிசயம்!!

வீடு காணமல் போன அதிசயம்!!

9 பங்குனி 2017 வியாழன் 12:30 | பார்வைகள் : 21677


இதுவரை, வீட்டுக்குள் புகுந்து கொள்ளையிட்டுச்செல்லும் திருடர்கள் பற்றி தான் கேள்விப்பட்டிருப்பீர்கள்.. இங்கு, 'வீட்டையே' திருடிச்சென்ற கொள்ளையர்களை பற்றி பார்க்கப்போகிறீர்கள்!!
 
சம்பவம் Yvelines மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது. கணவனும் மனைவியும் வெளியில் சென்றுவிட்டு... அவர்களில் வீட்டுக்குத் திரும்பி வந்தால்... பேரதிர்ச்சி!! வீட்டைக் காணவில்லை!அவசர அவசரமாக 'தங்கள் வீட்டைக்காணவில்லை' என காவல்நிலையத்தில் புகார் அளிக்க... காவல்துறையினர் வீட்டை தேடும் பணியில் ஈடுபட்டனர்...
 
அது ஒரு பக்கம் இருக்க... ஒரு 'வீடு' எப்படி காணாமல் போகும்...? 
 
இல்-து-பிரான்சுக்குள் நீங்கள் அடிக்கடி காணும், இருவர் மாத்திரம் தங்கக்கூடிய 'மரவீடு' தான் அது. 13 சதுர அடி அகலத்தில் சிறிய வசதிகள் கொண்ட மர வீடு அது. (புகைப்படத்தில் பார்க்கவும்) அதைத்தான் யாரோ கில்லாடிகள் வீட்டை அப்படியே தூக்கி ஒரு 'கண்டைனர்' வாகனத்தில்... 'கண்டைனர்'ருக்கு பதிலாக வைத்து... கடத்திச் சென்றுவிட்டார்கள்.  உள்ளே மின்சார வசதி.. தண்ணீர் குழாய் வசதி.. கட்டில் மெத்தை, சோஃபா கதிரை.. சமையல் பாத்திரங்கள் என மொத்தமாக கடத்திச் சென்றுவிட்டார்கள்! 
 
பின்னர், குறித்த தம்பதியினர் உள்ளூர் பத்திரிகைகளிடம் தெரிவித்து... நண்பர்கள் உதவியுடன் நான்கு நாட்கள் பின்னர் அந்த வீடு Yvelines மாவட்டத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டது. உள்ளே இருந்து என பொருட்களும் திருடப்படவில்லை. பூட்டிய வீடு பூட்டியே இருந்தது... ஆனால் ஏன் அந்த வீட்டைக் கடத்தினார்கள் எனத்தான் தெரியவில்லை!!

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்