Paristamil Navigation Paristamil advert login

டாஸ்மாக் முறைகேடு வழக்கு; ஐகோர்ட் நீதிபதிகள் விலகல்!

டாஸ்மாக் முறைகேடு வழக்கு; ஐகோர்ட் நீதிபதிகள் விலகல்!

25 பங்குனி 2025 செவ்வாய் 12:23 | பார்வைகள் : 640


அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக டாஸ்மாக் தொடர்ந்த வழக்கில் இருந்து விலகுவதாக நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் அமர்வு அறிவித்துள்ளது.

தமிழகத்தில், டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில், கடந்த 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை, அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. பின், 1,000 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்ததாக, அமலாக்கத் துறை அறிக்கை வெளியிட்டது.

அமலாக்கத் துறையின் இந்த சோதனை, அரசியலமைப்பு சட்டத்தின் கூட்டாட்சி அடிப்படை கட்டமைப்புக்கு விரோதமானது. விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் அதிகாரிகள், ஊழியர்களை துன்புறுத்தக் கூடாது' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக உள்துறை செயலர், டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தியது. வரும் 25ம் தேதி வரை எந்த மேல் நடவடிக்கையும் தொடர வேண்டாம்' என, அமலாக்கத் துறைக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதிகாரத்தை அமலாக்கத்துறை செயல்படுத்திய விதம் சரியில்லை என டாஸ்மாக் சோதனை விவகாரத்தில் அமலாக்கத்துறையை நீதிபதிகள் கண்டித்தனர்.

இந்நிலையில், இன்று (மார்ச் 25) அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக டாஸ்மாக் தொடர்ந்த வழக்கில் இருந்து விலகுவதாக நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் அமர்வு அறிவித்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்