மாதம் 20,000 யூரோக்கள்... அதிஷ்ட்டம் யாருக்கு..??!!

25 பங்குனி 2025 செவ்வாய் 09:15 | பார்வைகள் : 1807
மாதம் 20,000 யூரோக்கள் வீதம், 30 ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக பணம் தரும் Euro Dreams அதிஷ்ட்டலாப சீட்டிழுப்பு நேற்று மார்ச் 24 ஆம் திகதி இடம்பெற்றது.
இந்த சீட்டிழுப்பின் முடிவில் 40 இலக்கங்களில் இருந்து 3, 11, 26, 27, 28 மற்றும் 37 ஆகிய ஆறு சரியான இலக்கங்களை கொண்ட சீட்டுக்கு மாதம் 2,000 யூரோக்கள் வீதம் 5 வருடங்களுக்கு வழங்கப்பட உள்ளது.
அத்துடன், மேற்படி ஆறு சரியான இலக்கங்களோடு, கனவு இலக்கமான #1 இனை பெற்றவர்களுக்கு மாதம் 20,000 யூரோக்கள் வீதம் 30 ஆண்டுகளுக்கு பணம் வழங்கப்பட உள்ளது.
அதிஷ்ட்டசாலை அடுத்த 90 நாட்களுக்குள் FDJ நிறுவனத்தை தொடர்புகொண்டு பரிசை பெற்றுக்கொள்ள முடியும்.
***
கவனிக்க:
அதிஷ்ட்டலாபச் சீட்டிழுப்பு தனி நபர் விருப்பங்களுக்கு உட்பட்டது. இதில் பண இழப்பு, அடிமையாதல், குடும்ப பிரச்சனைகள் போன்ற அபாயங்கள் உள்ளன. உதவி தேவைப்படுவோர் 09 74 75 13 13 எனும் கட்டணமற்ற இலக்கத்துக்கு அழைக்க முடியும்.