விஜய் பட நடிகர் ஷிகான் ஹுசைனி காலமானார்

25 பங்குனி 2025 செவ்வாய் 09:40 | பார்வைகள் : 694
கடந்த 1986 ஆம் ஆண்டு கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான புன்னகை மன்னன் திரைப்படத்தின் ரசிகர்களுக்கு பரீட்சியமானவர் நடிகர் ஷிகான் ஹுசைனி. அதன் பின்னர் இவர் விஜய் நடிப்பில் வெளியான பத்ரிபடத்தில் குத்துச்சண்டை பயிற்சியாளராக நடித்திருந்தார். மேலும் மதுரையை பூர்வீகமாகக் கொண்ட இவர் ஒரு நடிகர் மட்டுமல்லாமல் கராத்தே மாஸ்டரும் ஆவார்.
அதன்படி முன்னுருக்கும் அதிகமான வில்வித்தை வீரர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார். இந்நிலையில் தான் இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.விஜய் பட நடிகர் காலமானார்.... சோகத்தில் திரையுலகம்!இதற்கிடையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த ஷிகான் ஹுசைனி, விஜய், உதயநிதி, பவன் கல்யாண் போன்ற அரசியல் தலைவர்களுக்கு சில வேண்டுகோள்கள் விடுத்திருந்தார். அதன்படி, தான் கராத்தே கற்றுக் கொடுக்கும் இடத்தை பவன் கல்யாண் வாங்கிக் கொள்ள வேண்டும் எனவும் விஜயிடம், தமிழ்நாடு முழுவதும் வீட்டுக்கு ஒரு வில் வித்தை வீரர் வீராங்கனை உருவாக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அடுத்தது இவருடைய மருத்துவ சிகிச்சைக்காக தமிழக அரசு ரூ. 5 லட்சம் நிதி உதவி வழங்கியது. அதேசமயம் இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வீடியோவும், புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வந்தது. கிட்டத்தட்ட மூன்று வாரங்களுக்கும் மேலாக தீவிர சிகிச்சை பெற்று வந்த ஷிகான் ஹுசைனி இன்று (மார்ச் 25) நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருடைய மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.