அனைத்து இஸ்லாமிய அமைப்புக்களையும் தடை செய்ய வேண்டும்.. மரீன் லு பென் காட்டம்!!

25 பங்குனி 2025 செவ்வாய் 12:52 | பார்வைகள் : 3989
பிரான்சில் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் அனைத்தையும் தடை செய்ய வேண்டும் என அரசியல் தலைவர் மரீன் லு பென் தெரிவித்துள்ளார்.
உள்துறை அமைச்சர் Bruno Retailleau, நேற்று சில தகவல்களை வெளியிட்டிருந்தார். அதில் இஸ்லாமிய அமைப்புகள் பல அடிப்படைவாதத்தை போதிப்பதாகவும், இஸ்லாமிய சிறுவர்களை சிறு வயது முதலே மோசமான மத போதனைகளுக்கு உட்படுத்தப்படுத்துவதாகவும், அதனைக் கட்டாயமானதாக பயிற்சிவிப்பதாகவும் அதிர்ச்சியான தகவல்களை வெளியிட்டார்.
அதை அடுத்து, Rassemblement national கட்சித்தலைவரும், வழக்கறிஞருமான மரீன் லு பென், “அனைத்து இஸ்லாமிய அமைப்புகளையும் தடை செய்ய வேண்டும்” என உள்துறை அமைச்சர் Bruno Retailleau இடம் கோரிக்கை வைத்துள்ளார்.
தனது X சமூகவலைத்தளத்தில் இது குறித்து பதிவேற்றியுள்ளார்.