போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக புதிய சட்டமாற்றங்கள்.. வாக்கெடுப்பு பிற்போடப்படுகிறது!

25 பங்குனி 2025 செவ்வாய் 15:41 | பார்வைகள் : 3197
போதைப்பொருள் கடத்தல்களை கட்டுப்படுத்த பல்வேறு சட்டமாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளன. இது தொடர்பான வாக்கெடுப்பு மார்ச் 25, இன்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற இருந்த நிலையில், காரணம் அறிவிக்கப்படாமல் இந்த வாக்கெடுப்பு பிற்போடப்பட்டுள்ளது.
நேற்று மார்ச் 24, திங்கட்கிழமை முதல் இந்த சட்டமாற்றங்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது. சட்டத்தில் மொத்தமாக 88 மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளன. இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் வாக்கெடுப்புக்கு திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அது பிற்போடப்பட்டு வரும் வியாழன் அல்லது வெள்ளிக்கிழமைகளில் வாக்கெடுப்பு மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த சட்டத்திருத்தத்தில் மிக முக்கியமானதாக, 120 மணித்தியால காவல்துறையினரின் தடுப்பு ( garde à vue ) வழங்குவதற்கு அனுமதிக்கப்படுகிறது.