Paristamil Navigation Paristamil advert login

பிரான்சில் நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த தேவாலயம்!

பிரான்சில் நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த தேவாலயம்!

7 பங்குனி 2017 செவ்வாய் 14:30 | பார்வைகள் : 19201


மனித குலம் தோன்றில காலம் தொட்டே மத நம்பிக்கைகள் ஊற்றெடுத்து வந்துள்ளன. உலகின் முதல் தேவாலயம் கி.பி 235 ஆம் ஆண்டில் சிரியாவில் கட்டப்பட்டுள்ளது என வரலாறுகள் குறிக்கின்றன. உலகின் மிக பழமையான தேவாலயங்கள் பட்டியலில் 4 ஆம் இடத்தை பிடித்ததும், ஐரோப்பாவின் மிக பழமையான தேவாலயமுமாக உள்ளது Saint-Pierre-aux-Nonnains.
 
பிரான்சின் Metz மாவட்டத்தில், கி.பி 380 இல் கட்டப்பட்ட இந்த கட்டிடம், முதலில் ஒரு இளைப்பாறும் கூடமாக இருந்தது. பின்னர் இது தேவாலயமாக உருவெடுத்தது 7 ஆம் நூற்றாண்டில். தேவாலயத்துக்குரிய அமைப்புகள் மெல்ல மெல்ல உருப்பெற்றது. பின்னர் 11 ஆம் நூற்றாண்டில் கட்டிடத்தின் உள் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 
 
1970 ஆம் ஆண்டில் இங்கு வர்த்தகமும், கண்காட்சிகளும் இடம்பெற்றன. அதன் பின்னர் இது முழுக்க முழுக்க தேவாலயமாக இன்றுவரை இயங்கி வருகிறது. 
 
திங்கள் முதல் வெள்ளிவரை மூடப்பட்டிருக்கும் இந்த தேவாலயம், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் குறிப்பிட்ட நேரம் வரை மட்டுமே திறந்திருக்கும். முகவரி :  1 Rue de la Citadelle, 57000 Metz, France
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்