Paristamil Navigation Paristamil advert login

யாழில் போராட்டம் – பொலிஸார் இடைமறித்தமையால் குழப்பநிலை

யாழில் போராட்டம் – பொலிஸார் இடைமறித்தமையால் குழப்பநிலை

26 பங்குனி 2025 புதன் 06:57 | பார்வைகள் : 673


யாழ்ப்பாண பல்கலைக்கழக இணைந்த சுகாதார விஞ்ஞான பீட மாணவர்களினால் தற்போது போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ள நிலையில், பொலிஸார் போராட்டகாரர்களை இடைமறித்தமையால் பதற்றம் நிலவி வருகின்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இருந்து ஆரம்பித்த பேரணியை பொலிஸார் தடுத்தபோதும் போராட்டக்காரர்கள் முன்னோக்கி சென்றுள்ள நிலையில் தற்போது இடை மறிக்கப்பட்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பேரணிகள் மற்றும் ஊர்வலங்கள் நடத்துவதற்கு தேர்தல் சட்டத்தின் படி தடை செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் தற்போது பல்கலைக்கழக மாணவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த பேரணிக்கு நீதிமன்றம் ஊடாக தடையுத்தரவு பெறும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர் எனவும் அறியப்படுகிறது.

நீண்ட கால வேலையில்லா பிரச்சினைக்கு தீர்வு கோரி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்