Paristamil Navigation Paristamil advert login

சீரற்ற காலநிலை : 2024 ஆம் ஆண்டில் €5 பில்லியன் யூரோக்கள் காப்பீடு!!

சீரற்ற காலநிலை : 2024 ஆம் ஆண்டில் €5 பில்லியன் யூரோக்கள் காப்பீடு!!

26 பங்குனி 2025 புதன் 08:12 | பார்வைகள் : 1513


இயற்கை அனர்த்தங்களுக்காக காப்பீடு வழங்கும் தொகை கடந்த 2024 ஆம் ஆண்டில் €5 பில்லியன் யூரோக்கள் எட்டியதாக பிரெஞ்சு காப்புறுதிகளுக்கான கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

ஆலங்கட்டி மழை, இடி மின்னல் தாக்குதல்கள், வெள்ளம், பனிப்பொழிவு போன்ற அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் காப்புறுதிகளே €5 பில்லியனை எட்டியுள்ளது.   எவ்வாறாயினும் 2020 முதல் 2023 ஆம் ஆண்டுவரையான ஆண்டுகள் பதிவான சராசரி தொகையை விட (€5.6 பில்லியன் யூரோக்கள்) இது குறைவாகும்.

இவற்றுள் புயல் மற்றும் பனிப்பொழிவினால் ஏற்பட்ட சேதங்களுக்கான காப்புறுதித்தொகை மட்டும் €2.2 பில்லியன் என தெரிவிக்கப்படுகிறது.

1982-1989 ஆண்டுகளில் சராசரியாக €1.5 பில்லியன் யூரோக்களாக இந்த தொகை பதிவாகியிருந்தது.

வர்த்தக‌ விளம்பரங்கள்