வாழைப்பழத்தில் முகம் கழுவிய அமெரிக்க ஆணழகன்

26 பங்குனி 2025 புதன் 08:41 | பார்வைகள் : 223
உடற்பயிற்சியாளர் ஒருவர், வாழைப்பழத் தோலை முகத்தில் தேய்த்து தண்ணீரில் முகம் கழுவும் வீடியோ சமூக வலைத்தளத்தில் 71 கோடி முறை ரசிக்கப்பட்டு உள்ளது.
உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் அமெரிக்க ஆணழகன் ஆஷ்டன் ஹால் (Ashton Hall) ஆவார். அவர் தனது உடற்பயிற்சி மற்றும் பழக்கங்களை வீடியோவாக பதிவு செய்து எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிடுகிறார்.
அவரை 30 இலட்சம் பேர் பின் தொடர்கிறார்கள். உடற்பயிற்சி கருவிகள் இல்லாமல் உடற்பயிற்சி செய்து காட்டுவது அவரது சிறப்பு . அவர் (Ashton Hall) சமீபத்தில் தனது 'காலை பழக்க வழக்கம்' என்ற பெயரில் ஒரு வீடியோவை வெளியிட்டார்.
அதில் ஒரு கண்ணாடி கோப்பையில் ஐஸ் கட்டிகளை நிரப்பிய நீரில் முகத்தை அமிழ்த்தி எடுப்பதுடன், பின்னர் வாழைப்பழத் தோலை முகத்தில் தேய்த்து கழுவுகிறார் (Ashton Hall) . இதனால் முகம் பொலிவு பெறுவதாக அவர் விளக்குகிறார்.
இந்நிலையில் (Ashton Hall) காணொளியை 71 கோடியே 20 இலட்சம் பேர் பார்வையிட்டுள்ளமை ஆச்சரியப்படுத்தியுள்ளது