Paristamil Navigation Paristamil advert login

iWatch, AirPod சாதனங்களில் குட்டி Camera-வை இணைக்க ஆப்பிள் திட்டம்

iWatch, AirPod சாதனங்களில் குட்டி Camera-வை இணைக்க ஆப்பிள் திட்டம்

26 பங்குனி 2025 புதன் 09:05 | பார்வைகள் : 773


Apple, தனது Apple Watch மற்றும் AirPods சாதனங்களில் சிறிய கமெராவை இணைக்கும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

AI-ஆல் இயக்கப்படும் Visual Intelligence அம்சத்தை கொண்டு, இந்த புதிய தொழில்நுட்பம் ChatGPT, Google Search போன்ற மூன்றாம் தரப்பு AI மொடல்களுக்கு மாறாக, Apple-ஊடாகவே செயல்பட வழிவகுக்கும் என கூறப்படுகிறது.

Bloomberg செய்தியாளர் மார்க் குர்மான் வெளியிட்ட தகவல்களின்படி, 2027-க்குள் கமெரா கொண்ட Apple Watch அறிமுகம் செய்யப்படும்.

இந்த Visual Intelligence தொழில்நுட்பம் Google Lens போலவே செயல்பட்டு, பொருட்களை ஸ்கேன் செய்து தகவல்களை வழங்கும்.

Apple Watch Ultra மொடலில், கமெரா Digital Crown மற்றும் Power Button அருகில் இடம் பெறலாம். இது உங்கள் கையை தூக்கி புகைப்படம் எடுக்க அல்லது வளையத்தில் உள்ளவற்றை ஸ்கேன் செய்ய உதவும்.

Apple, AirPods-ல் கூட கமெராசேர்க்கும் வாய்ப்பு இருப்பதாக தகவல் உள்ளது. இது AI வசதிகளை விரிவுபடுத்தி, சூழலை புரிந்து கொள்ளும் திறன் வழங்கும்.

Apple, தற்போதுள்ள AI Visual Intelligence மொடல்களை மூன்றாம் தரப்பில் இருந்து மாற்றி, சொந்த AI தொழில்நுட்பத்தை உருவாக்க முயன்றுவருகிறது.

Meta போன்ற நிறுவனங்கள் AI-powered wearables சாதனங்களை ஏற்கனவே அறிமுகப்படுத்தியுள்ளன. ஆனால் Apple-ன் AI-powered ஸ்மார்ட் வாட்ச், எதிர்காலத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்தும் என கணிக்கப்படுகிறது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்