Paristamil Navigation Paristamil advert login

இராணுவத்தில் சேர படையெடுக்கும் மாணவர்கள்.. 12,000 இற்கும் மேற்பட்டோர் பதிவு!!

இராணுவத்தில் சேர படையெடுக்கும் மாணவர்கள்.. 12,000 இற்கும் மேற்பட்டோர் பதிவு!!

26 பங்குனி 2025 புதன் 13:00 | பார்வைகள் : 5495


இவ்வருட ஆரம்பம் முதல் பிரான்சில் 12,000 இற்கும் அதிகமான மாணவர்கள் இராணுவத்தில் சேர ஆர்வம் காட்டியுள்ளனர்.

கடந்த 5 ஆம் திகதி (மார்ச்) ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தொலைக்காட்சியில் உரையாற்றியிருந்த போது, பிரெஞ்சு இராணுவத்தை பலப்படுத்த வேண்டும் எனவும், இளைஞர்கள் இராணுவத்தில் சேரவேண்டும் எனவும் கோரியிருந்தார். இந்நிலையில், அதிகளவான மாணவர்கள் இராணுவத்தில் சேருவதற்காக தங்களது பெயர் விபரங்களை பதிவு செய்து வருகின்றனர். 

இவ்வருட ஆரம்பம் முதல் 12,000 மாணவர்கள் இராணுவத்தில் சேர ஆர்வம் காட்டியுள்ளனர். அவர்களில் 7,500 பேர் இராணுவத்தில் இணைவதற்கான படிவங்களை நிரப்பி அனுப்பியுள்ளனர். 

தற்போது பிரெஞ்சு இராணுவ சேவையில் (அனைத்து பிரிவுகளையும் சேர்த்து) 84,000 பேர் சேவையாற்றுகின்றனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்