அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரிப்பு! இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட அறிவிப்பு

26 பங்குனி 2025 புதன் 15:10 | பார்வைகள் : 2515
நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்று (26)அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று அதிகரிப்பைப் பதிவுசெய்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று (26) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 292 ரூபாய் 32 சதம், விற்பனைப் பெறுமதி 300 ரூபாய் 84 சதம்.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 376 ரூபாய் 70 சதம், விற்பனைப் பெறுமதி 390 ரூபா 89 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 313 ரூபாய் 70 சதம், விற்பனைப் பெறுமதி 326 ரூபாய் 43 சதம்.
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 328 ரூபாய் 34 சதம், விற்பனைப் பெறுமதி 343 ரூபாய் 56 சதம்.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 203 ரூபா 35சதம், விற்பனைப் பெறுமதி 212 ரூபாய் 3 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 182 ரூபாய் 35சதம், விற்பனைப் பெறுமதி 191 ரூபாய் 75சதம்.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 216 ரூபாய் 85 ரூபாய், விற்பனைப் பெறுமதி 226 ரூபாய் 58 சதம்.
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபாய் 93 சதம், விற்பனைப் பெறுமதி 2 ரூபாய் 1சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.