ஒரு நாளில் இரண்டு தடவைகள் மறையும் ஆச்சரிய வீதி!
2 பங்குனி 2017 வியாழன் 10:30 | பார்வைகள் : 19574
இந்த தகவல் நிச்சயம் உங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கும். பிரான்சில் இருக்கும் ஒரு வீதியை... ஒரு நாளைக்கு குறிப்பிட்ட சில மணிநேரங்கள் மாத்திரமே பயன்படுத்த முடியும். மீதி நேரங்களில் அந்த வீதி கடலுக்குள் மூழ்கிவிடும்.!!
Passage du Gois எனும் வீதிதான் அது. Noirmoutier தீவில் உள்ளது இந்த வீதி. Île de Noirmoutier தீவையும் Beauvoir-sur-Mer தீவையும் இணைக்கும் கடல்வழி வீதி தான் இது. ஒரு நாளில் சில மணிநேரங்கள் மாத்திரமே இந்த வீதி வெளியில் தென்படும். மீதி நேரங்களில் கடல் நீர்மட்டம் உயர்ந்து... வீதியை மறைத்துவிடும். Beauvoir-sur-Mer செல்பவர்கள், தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு... வீதி தெரிகிறதா என காத்திருப்பார்கள். வீதி தெரிய ஆரம்பித்ததும் வேகமாக போய்விட வேண்டும்.
வீதியை விட்டு உங்கள் மகிழுந்து விலகுமானால்... நேரே கடலுக்குள் பாய்ந்துவிடும் ஆபத்தும் உண்டு. 4.1 கிலோ மிட்டர்கள் நீளம் இந்த வீதி! இந்த வீதி 1577 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.
மற்றுமொரு ஆச்சரிய தகவல் சொல்கிறோம். மாபெரும் சைக்கிள் ஓட்டப்போட்டியான Tour de France, 1999 ஆம் ஆண்டு இடம்பெறும் போது இரண்டாவது கட்டத்தை இந்த வீதியில் நடத்தினார்கள்..!! ஆச்சரியமாக இருக்கிறதல்லவா... கடந்த 2011 ஆம் ஆண்டு Tour de France போட்டியின் முதலாவது கட்டம் இங்கே தான்!!
வீதி மறைவதற்குள் ஓடி முடித்த கதை - பெரும் கதை!!