எந்த ஐபிஎல் அணித்தலைவரும் செய்யாத சாதனை - ஷ்ரேயஸ் ஐயருக்கு கிடைத்த பெருமை

26 பங்குனி 2025 புதன் 17:01 | பார்வைகள் : 319
2025 ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில், பஞ்சாப் மற்றும் குஜராத் அணிகள் மோதியது.
இதில் முதலில் துடுப்பாட்டம் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 243 ஓட்டங்கள் குவித்தது. அதிகபட்சமாக அணித்தலைவர் ஷ்ரேயாஸ் ஐயர் 97 ஓட்டங்களும், பிரியான்ஷ் ஆர்யா, 47 ஓட்டங்களும் எடுத்தனர்.
கிளென் மேக்ஸ்வெல் ஒரு ஓட்டம் கூட எடுக்காமல் டக்அவுட் ஆனதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை(19) டக் அவுட் ஆனவர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார்.
தொடர்ந்து, 244 ஓட்டங்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி, 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 232 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
குஜராத் தரப்பில் சாய் சுதர்சன் மற்றும் ஜோஸ் பட்லர் அரைசதம் அடித்தும், 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணித்தலைவர் ஷ்ரேயாஸ் ஐயர் இரன்டு சாதனைகளை படைத்துள்ளார்.
இதன் மூலம் 3 ஐபிஎல் அணிகளுக்கு அணித்தலைவராக இருந்த 2வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
முன்னதாக டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளில் அணித்தலைவராக இருந்துள்ளார்.
ஏற்கனவே அஜிங்க்ய ரஹானே, புனே சூப்பர் ஜெய்ன்ட்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளின் அணித்தலைவராக இருந்துள்ளார்.
இதே போல் இந்த போட்டியில் அரை சதம் அடித்ததன் மூலம், ஐபிஎல் தொடரில் அணித்தலைவராக அறிமுகமான 3 போட்டியிலும் அரைசதம் அடித்த ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இதே போல், 2018 ஆம் ஆண்டு டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் அணித்தலைவராக அறிமுகமான போது, 93 ஓட்டங்கள் குவித்தார்.
கடந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணித்தலைவராக இருந்த ஷ்ரேயாஸ் ஐயரை இந்த ஐபிஎல் ஏலத்தில் ரூ.26.75 கோடிக்கு பஞ்சாப் அணி வாங்கியது.