அத்துமீறி வந்து பராக்கின் காலை தொட்டு கும்பிட்ட ரசிகர்!

27 பங்குனி 2025 வியாழன் 11:36 | பார்வைகள் : 614
ராஜஸ்தான் ராயல்ஸ் அணித்தலைவர் ரியான் பராக்கின் காலில் ரசிகர் விழுந்த வீடியோ வைரலாகியுள்ளது.
கவுகாத்தியில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது.
இப்போட்டியில் ரியான் பராக் (Riyan Parag) 15 பந்துகளில் 3 சிக்ஸர்களுடன் 25 ஓட்டங்கள் விளாசினார். அத்துடன் 4 ஓவர்கள் பந்துவீசிய அவர் 25 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.
கொல்கத்தா அணியின் துடுப்பாட்டத்தின்போது, ரியான் பராக் பந்துவீச முயன்றபோது திடீரென ரசிகர் ஒருவர் களத்திற்குள் புகுந்துவிட்டார்.
இதனை கவனித்த பராக் திரும்பிப் பார்த்தபோது, குறித்த ரசிகர் அவரது காலை தொட்டு கும்பிட்டு பின் கட்டிப்பிடித்தார். பராக் இதை சற்றும் எதிர்பார்க்காததால் திகைத்து நின்றார்.
அதனைத் தொடர்ந்து பாதுகாவலர் ஒருவர் வந்து ரசிகரை அங்கிருந்து அழைத்துச் சென்றார். இதுதொடர்பான காணொளி தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.