Élysée Palace தோற்றமும் வரலாறும்!! - நேற்றைய தொடர்ச்சி!!
27 மாசி 2017 திங்கள் 10:30 | பார்வைகள் : 18982
1803 ஆம் ஆண்டு மன்னன் Joachim Murat க்கு இந்த கட்டிடம் கை மாறுகிறது. அதை தொடர்ந்து 1808 ஆம் ஆண்டு மாவீரன் நெப்போலியனுக்கு இந்த கட்டிடம் வருகிறது.
1815 ஆம் ஆண்டு, ஜூன் 15 ஆம் திகதி, பிரான்சின் முதல் பேரரசான (First French Empire) மாவீரன் நெப்போலியன் தலைமையில் "Battle of Waterloo" யுத்தம் ஆரம்பிக்கிறது. பெல்ஜியத்தின் Waterloo நகரத்தில் (அப்போது நெதர்லாந்தின் நகரமாக இருந்தது) ஆரம்பித்த யுத்தம் பின்னர் படிப்படியாக வேறு தளங்களுக்கு முன்னேறிச் சென்றது. (இது குறித்த விரிவான தகவல்கள் பின்னொரு நாளில் பார்க்கலாம்) யுத்தம் முடிந்த கையோடு, மாவீரன் நெப்போலியன் மீண்டும் குறித்த Élysée க்கே வந்தான். அதன் பின்னர் அந்த கட்டிடம் "Élysée-Napoléon" என பெயர்மாறியது. நெப்போலியனைத் தொடர்ந்து பிரெஞ்சு தேசத்துக்கு தலைமை தாங்கும் தலைவர்கள் மன்னர்கள் அனைவரும் Élysée இல் தங்க... அதுவே பின்னர் ஜனாதிபதி மாளிகை என மாற்றம் கொண்டது.
ஜூன் 1940 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போரின் போது Élysée மூடப்பட்டது. பின்னர் 6 வருடங்கள் கழித்து 4 ஆம் குடியரசு ஜனாதிபதியான Vincent Auriol ஆல் Élysée திறக்கப்பட்டது. 1959 இல் இருந்து 1969 வரையான பத்து வருடங்கள், ஐந்தாம் குடியரசின் முதல் ஜனாதிபதி Charles de Gaulle கைக்கு வந்தது. ஆனால் அவருக்கு இந்த அரண்மனை போன்ற அமைப்பில் உள்ள Élysée பிடிக்கவில்லை. 'பியாமா அணிந்து கொண்டு அரண்மனையில் மன்னன் வலம்வருவது போன்ற இந்த ஏற்பாடு எனக்கு பிடிக்கவில்லை!' என குறிப்பிட்டிருந்தார்.
1970 ஆம் ஆண்டு ஜனாதிபதி Georges Pompidou சில அறைகளை மாற்றி தனக்கு பிடித்தாற்போல் அமைத்துக்கொண்டார்.
ஜனாதிபதி Jacques Chirac இங்கு தன் மனைவியுடன் குடியேறியதும் பல மாற்றங்கள் வந்தது. அரண்மனைக்கான செலவு 102 வீதத்தால் திடீரென அதிகரித்தது. வருடத்துக்கு 90 மில்லியன் யூரோக்கள் செலவானது. மது பொருட்களின் தேவைக்கே வருடத்துக்கு ஒரு மில்லியன் யூரோக்கள் செலவானதாக L'argent caché de l'Élysée புத்தகம் சொல்கிறது.
Élysée தோட்டத்தில் சுதந்திர தினங்களில் இங்கு மிகப்பெரும் விருந்து (Party) இடம்பெறுவது வழக்கம். அதை 2010 ஆம் ஆண்டோடு ஜனாதிபதி Nicolas Sarkozy நிறுத்திவிட்டார்.
இப்போது இந்த ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி பிரான்சுவா ஒலோந்து (François Hollande) வசிக்கிறார். எப்போது வரை என்றால் இவ்வருட ஆட்சிக்காலம் முடியும் வரை!!