தடைகளை தாண்டி திரைக்கு வரும் ‘வீர தீர சூரன்’…

27 பங்குனி 2025 வியாழன் 13:38 | பார்வைகள் : 2268
விக்ரம் நடித்த "வீரதீர சூரன்" திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், டெல்லி உயர்நீதிமன்றம் விதித்த தடை காரணமாக இன்று வெளியாகுமா என்ற சந்தேகம் ஏற்பட்டது. மேலும், இன்று மதியம் இந்த படத்தை திரையிட நான்கு வாரங்களுக்கு தடை விதிக்கப்பட்டதாக செய்தி வெளியானது. இது விக்ரம் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆனால், அதன் பின் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதை அடுத்து, வழக்கு வாபஸ் பெறப்பட்டதாகவும், இதனை அடுத்து இந்த படத்தை வெளியிட தடை இல்லை என நீதிமன்ற உத்தரவுக்கு பின்னர் உடனடியாக படத்தை ரிலீஸ் செய்வதற்கான அனைத்து பணிகளும் செய்யப்பட்டது.
இந்த நிலையில், சில நிமிடங்களுக்கு முன் "வீரதீர சூரன்" உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்டதாகவும், ரசிகர்கள் முதல் நாள் முதல் காட்சியை பார்த்து ரசித்து கொண்டாடி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதுவரை வெளியான தகவலின் படி, விக்ரம் நடித்த மாஸ் காட்சிகள் அட்டகாசமாக இருப்பதாகவும், ஒரு அதிரடி ஆக்ஷன் கமர்சியல் திரைப்படமாக இந்த படம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.