மோகன்லாலின் ‘எம்புரான்’ எப்படியிருக்கிறது ?

27 பங்குனி 2025 வியாழன் 13:50 | பார்வைகள் : 888
லாலேட்டன் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் மோகன்லால். இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் எம்புரான் திரைப்படம் இன்று (மார்ச் 27) உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. கடந்த 2019-ல் வெளியான லூசிபர் திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி இருக்கும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்து அதிகமாக இருந்து வந்தது. அதன்படி பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் நிலையில் ரசிகர்களை படத்தை காண மிகுந்த ஆர்வத்துடன் கூட்டம் கூட்டமாக திரையரங்கிற்கு சென்று கண்டு களிக்கின்றனர். தற்போது இந்த படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்.
பிரித்விராஜ், மோகன்லால் கூட்டணியில் வெளியான லூசிபர் படத்தின் தொடர்ச்சியாக நகரும் எம்புரான் படத்தில் (டோவினோ தாமஸ்) ஜெட்டின் ராமதாஸ் ஆட்சியைப் பிடித்துள்ளார். முதல்வராக பதவி வகிக்கும் இவர் சிறிய மாற்றத்தை கொண்டுவர தயாராகிறார். ஆனால் சகோதரி பிரியதர்ஷினிக்கு (மஞ்சு வாரியர்) இதில் விருப்பமில்லை. இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் ஸ்டீபன் (மோகன்லால்) திரும்ப வரவேண்டும் என விரும்புகிறார்கள். ஆனால் ஆபிரகாம் குரேஷி ஒரு தாதாவாக என்ன செய்கிறார் என்பதுதான் படத்தின் மீதி கதை. இந்த படத்தில் பிரித்விராஜ் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்
அந்த வகையில் லூசிபர் படத்தை எடுத்த அதே ஸ்டைலை இந்தப் படத்தில் கொண்டு வந்துள்ளார். மேக்கிங், திரைக்கதை அனைத்தும் சிறப்பு. மோகன்லாலின் அறிமுக காட்சி பிரம்மாண்டம். இரண்டாம் பாதி விறுவிறுப்பாக செல்கிறது. அதன்படி மோகன்லால், மஞ்சு வாரியர் வரும் காட்சிகளில் ரசிகர்களின் கரகோஷத்தால் திரையரங்கமே அதிர்கிறது. மோகன்லாலின் மாஸ் மட்டுமில்லாமல் தொழில்நுட்ப கலைஞர்களும் இந்த படத்திற்கு மிகப்பெரிய பலம் தந்துள்ளனர்.அதன்படி தீபக் தேவின் இசை ஒரு பக்கம் மிரட்ட, மற்றொரு பக்கம் சுஜித் வாசுதேவின் ஒளிப்பதிவு பட்டைய கிளப்புகிறது. இறுதியில் இந்த படம் மூன்றாம் பாகத்திற்கான லீட் கொடுக்கப்பட்டு ஒரு சர்ப்ரைஸானா கேமியோவுடன் படம் முடிக்கப்பட்டுள்ளது.