அசோக் செல்வன் போர் தொழில் இயக்குனருடன் மீண்டும் கூட்டணி?

27 பங்குனி 2025 வியாழன் 14:28 | பார்வைகள் : 907
அசோக்செல்வன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு மூணாறில் நடைபெறுவதாக தகவல் கிடைத்துள்ளது.அசோக் செல்வன் தமிழ் சினிமாவில் வலம் வரும் இளம் நடிகர்களில் ஒருவர் ஆவார். இவரது நடிப்பில் வெளியான தெகிடி, ஓ மை கடவுளே, போர் தொழில், சபாநாயகன், ப்ளூ ஸ்டார் போன்ற படங்கள் வெற்றி படங்களாக அமைந்துள்ளது. இதன் பின்னர் அசோக் செல்வன், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள தக் லைஃப் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
அதேசமயம் அசோக் செல்வன், கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருவதாகவும் இந்த படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக பிரீத்தி முகுந்தன் நடிப்பதாகவும் ஏற்கனவே தகவல் வெளியானது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தின் படப்பிடிப்பு அந்த பிப்ரவரி மாதம் தொடங்கி மூணாறு போன்ற பகுதிகளில் நடைபெற்றதாக சொல்லப்படுகிறது.
அடுத்தது இந்த படத்தினை அசோக் செல்வனின் சகோதரி அபிநயா செல்வன் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.போர் தொழில் இயக்குனருடன் மீண்டும் கூட்டணி அமைத்த அசோக் செல்வன்?இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால், இந்த படமானது போர் தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜாவின் கதையில் உருவாகி வருவதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் கார்த்திகேயன் ராமகிருஷ்ணன், விக்னேஷ் ராஜாவின் உதவியாளர் எனவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் ஏற்கனவே அசோக் செல்வன் மீண்டும் போர் தொழில் பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கப் போவதாக தகவல் வெளியான நிலையில் தற்போது அவருடைய கதையில் அசோக்செல்வன் நடித்து வரும் தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.