Paristamil Navigation Paristamil advert login

Élysée Palace - ஜனாதிபதி மாளிகை! - தோற்றமும் வரலாறும்!!

Élysée Palace - ஜனாதிபதி மாளிகை! -  தோற்றமும் வரலாறும்!!

26 மாசி 2017 ஞாயிறு 14:30 | பார்வைகள் : 18736


ஜனாதிபதி பற்றி உங்களுக்கு நிறைய தெரியும்... ஜனாதிபதி வசிக்கும் Élysée Palace பற்றி தெரியுமா??! இன்றைய பிரெஞ்சு புதினத்தில் தெரிந்துகொள்வோம்!! 
 
இதோ, பரிசின் எட்டாம் வட்டாரத்தில் 18 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மூன்று மாடி கட்டிடம்... இதுவே மதிப்புக்குரிய பிரெஞ்சு ஜனாதிபதி வசிக்கும் மாளிகை. 
 
பரிசின் 8 ஆம் வட்டாரத்தில், சோம்ஸ் எலிசேக்கு பக்கத்தில் உள்ள இந்த ஜனாதிபதி மாளிகை கட்ட ஆரம்பிக்கப்பட்டது 1718 ஆம் ஆண்டில். நான்குவருடங்கள் எடுத்துக்கொண்டு விறுவிறுவென வளர்ந்த கட்டிடம்... 1722 ஆம் ஆண்டு திறந்துவைக்கப்பட்டது. அப்போது அதன் பெயர்  Hôtel d'Évreux. அவருக்கு சொந்தமான கட்டிடம் தான் அது. பின்னர் Évreux 1753 இல் இறக்க.. 15ஆம் லூயி மன்னனுக்கு சொந்தமானது இந்த கட்டிடம். அதன் பின்னர் இன்றுவரை அது அரச சொத்தாக பிரகடனப்படுத்தப்பட்டது. 
 
Armand-Claude Mollet , Jean Cailleteau என இரு கட்டிட கலைஞர்கள் வடிவமைத்து நிர்மாணித்த கட்டிடம் இது. இவர்கள் குறித்த தரவுகள் இணையத்தில் இல்லை. 15 ஆம் லூயியிடம் இருந்து பல மன்னர்கள் கைகளுக்கு மாறி வந்தது!!
 
அதே போல் மாளிகையின் உள் தோற்ற வெளித்தோற்ற அழகும் பராமரிப்பும் மெருகேறி வந்தது. ஆங்கில தோட்டம் போன்று எழிலான ஒரு மாளிகையாக மாறியது இந்த கட்டிடம். 
 
'லெஜண்ட்' ஓவியர் Holbein இன், The Ambassadors  ஓவியம் இங்கு கொண்டுவரப்பட்டது. தற்போது அந்த ஓவியம் இலண்டனில் உள்ள  National Gallery இல் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து Frans Hals இன் Bohemian ஓவியம் இங்கு கொண்டுவரப்பட்டது. (தற்போது இந்த ஓவியம் நமது Louvre இல் உள்ளது.  இதுபோன்ற பல 'மாஸ்ட்டர் பீஸ்' பொருட்கள் அழகுக்காக கொண்டுவரப்பட்டது. தற்போது அவற்றை எல்லாம் அருங்காட்சியகங்கள் தத்தெடுத்துக்கொண்டு விட்டன. 
 
இப்படியாக கைமாறிக்கொண்டும், பெயர்மாறிக்கொண்டும் இருந்த கட்டிடம், 1808ம் ஆண்டு "Élysée-Napoléon" என உருமாறியது. அந்த கதை நாளைய பிரெஞ்சு புதினத்தில்!!
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்