Paristamil Navigation Paristamil advert login

Le Canard enchaîné - நடுங்க வைக்கும் பத்திரிகை ஒன்றின் கதை..!

Le Canard enchaîné - நடுங்க வைக்கும் பத்திரிகை ஒன்றின் கதை..!

25 மாசி 2017 சனி 12:30 | பார்வைகள் : 18636


பிரெஞ்சு தேசத்து அரசியல்வாதிகள் யாருக்கு பயப்பிடுகிறார்களோ இல்லையோ,  'வாத்து' என செல்லமாக அழைக்கப்படும்  Le Canard enchaîné பத்திரிகைக்கு பயப்பிடவே செய்வார்கள். 
 
புலனாய்வு செய்தித்தாள் என வெறும் ஒற்றை வார்த்தையில் கூறிவிட்டு கடக்கமுடியாது. பிரெஞ்சு அரசியலில் பல மாற்றங்களை ஏற்படுத்திய மிக முக்கியமான பத்திரிகை இது. இப்பத்திரிகை தொடர்பான பல சுவாரஷ்யங்கள் சொல்ல இருக்கின்றன. அவற்றை இனி வரும் நாட்களில் சொல்கிறோம். இன்று, Le Canard enchaîné பத்திரிகையில் தோற்றமும் வரலாறும் மிக சுருக்கமாக!!
 
Le Canard enchaîné என்றால் என்ன அர்த்தம்?  நேரடியாக மொழி பெயர்த்தால், 'சங்கிலியால் பிணைக்கப்பட்ட வாத்து!' என பொருள் படும். Canard என்றால் வாத்து, ஆனால் செய்தித்தாள் என்பதைக்கூட Canard என தான் கூறுவார்கள். (பண்டைய பிரெஞ்சு சொல்) சுருக்கமாக 'வாத்து!' எட்டுப் பக்களைக் கொண்டு ஒவ்வொரு புதன்கிழமையும் வெளிவருகிறது. 
 
1915 ஆம் ஆண்டு முதலாம் உலகப்போர் சமயத்தில் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பித்த நாள் தொட்டு புலனாய்வு அரசியல் கட்டுரைகளை வெளியிட்டும், அரசியல் கேலிச்சித்திரம் போன்றவற்றை வெளியிட்டும் திணறடித்து வருகிறது. 'எட்டே எட்டு' பங்களை கொண்டு கருப்பு வெள்ளையில் வெளியாகிறது... கடந்த 102 வருடங்களாக!!
 
பிரெஞ்சு ஜனாதிபதிகளான François Mitterrand, Charles de Gaulle போன்ற தலைவர்களுக்கு தீரா தலைவலி இந்த வாத்து. ஜனாதிபதி Charles de Gaulle நக்கலாக கேட்பாராம், 'இன்று பறவை என்ன சொல்கிறது?' ( Que dit la volaille?) என. 
 
வேறு எந்த ஊடகங்களும் வெளியிடாத அரசியல் திருகு தாளங்களை இப்பத்திரிகை தொடர்ச்சியாக வெளியிட, 'எங்கிருந்து இந்த செய்திகளை எடுக்கிறார்கள்?' என அரசியல் தலைவர்கள் மண்டையை பிய்த்துக்கொள்வார்கள். இந்த பட்டியலில் தற்போது 'லேட்டஸ்ட்டாக' சிக்கியவர் ஜனாதிபதி வேட்பாளர் François Fillon. அரசியல் அஸ்திவாரமே தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. 
 
இப்பத்திரிகை அலுவலகத்துக்கு 'ப்ளம்பர்' வேடத்தில் வந்த புலனாய்வு அதிகாரி ஒருவரின் கதை மிக சுவாரஷ்யம். அது பிறிதொரு நாளில்...!!

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்