தென்னிந்தியாவில் அமையவுள்ள உலகின் பெரிய கிரிக்கெட் மைதானம் - எந்த மாநிலம் தெரியுமா?

28 பங்குனி 2025 வெள்ளி 08:58 | பார்வைகள் : 369
உலகின் பெரிய கிரிக்கெட் மைதானத்தை அமராவதியில் அமைக்க ஐசிசி ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்தியாவில் மற்ற விளையாட்டுகளை விட கிரிக்கெட்டிற்கு அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர். உலகளவிலும் கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது.
இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கு, உலகளவில் ரசிகர்கள் உண்டு. 18 வது ஐபிஎல் தொடர் மார்ச் 23 ஆம் திகதி தொடங்கி, 13 மைதானங்களில் நடைபெற்று வருகிறது.
தற்போது குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட்மைதானம் உலகின் மிகப்பெரிய மைதானமாகக் கருதப்படுகிறது.
இங்கு, ஒரேநேரத்தில் 1,32,000 ரசிகர்கள் அமர்ந்து போட்டியைக் காணும் வகையில் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆந்திரா மாநிலத்தில் உருவாக்கப்பட்டு வரும் அமராவதி நகரில் அதிநவீன வசதிகளுடன், அதை விட பெரிய மைதானத்தை உருவாக்க ஆந்திரா மாநில திட்டமிட்டுள்ளது.
200 ஏக்கர் பரப்பளவில் அமராவதியில் உருவாக உள்ள இந்த விளையாட்டு நகரில், கிரிக்கெட் மைதானத்திற்கு 60 ஏக்கர் ஒதுக்கபப்பட உள்ளது.
தற்போது ஐசிசி இதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளது. இதற்கான செலவை ஆந்திர மாநில அரசு மற்றும் பிசிசிஐ இணைந்து மேற்கொள்ளும்.
2029 ஆம் ஆண்டு அமராவதி தேசிய விளையாட்டு போட்டிகளை நடத்த உள்ள நிலையில்,அதற்கு முன்னர் இந்த மைதானம் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகின் பெரிய கிரிக்கெட் மைதானங்கள்
1. நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானம் (அகமதாபாத், இந்தியா) 1.32 லட்சம் இருக்கை வசதிகள்.
2. மெல்பர்ன் கிரிக்கெட் திடல் (மெல்பர்ன், ஆஸ்திரேலியா)-1 லட்சத்துக்கும் அதிகமான இருக்கை வசதிகள்.
3. ஈடன் கார்டன் (கொல்கத்தா, இந்தியா) 68,000 இருக்கை வசதிகள்
4. ஷாஹீத் வீர் நாராயண் சிங் கிரிக்கெட் மைதானம் (ராய்ப்பூர், இந்தியா) - 65,000 க்கும் மேற்பட்ட இருக்கை வசதிகள்
5. பெர்த் மைதானம் (பெர்த், ஆஸ்திரேலியா) -61,000-க்கும் மேற்பட்ட மக்கள் இருக்கை வசதிகள்