யுக்ரேனுக்கு பயணமாகும் பிரான்ஸ்-பிரித்தானிய தூதுக்குழு!!

28 பங்குனி 2025 வெள்ளி 09:18 | பார்வைகள் : 2209
பிரான்ஸ்-பிரித்தானியா இணைந்த தூதுக்குழு ஒன்று யுக்ரேனுக்கு பயணமாக உள்ளதாக ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அறிவித்துள்ளார்.
பரிஸ் மற்றும் யுக்ரோனிய ஆதரவு நாடுகளின் தலைவர்கள் இணைந்து பங்கேற்ற மாநாடு ஒன்று நேற்று வியாழக்கிழமை மாலை பரிசில் இடம்பெற்றது. அதில் வைத்தே ஜனாதிபதி மக்ரோன் இதனைக் குறிப்பிட்டார். “அடுத்து வரும் நாட்களில்” பிரான்ஸ்-பிரித்தானிய தூதுக்குழு யுக்ரேனுக்கு பயணமாக உள்ளது. மூன்று முதல் நான்கு வாரங்களுக்குள் யுக்ரேனிய படைகளின் தேவைகள் குறித்து அறிந்துகொண்டு, பங்களிப்பாளர்களுடன் இணைந்து துல்லியமான திட்டத்தை செயற்படுத்துவோம் என நான் நம்புகிறேன்!” என ஜனாதிபதி மக்ரோன் தெரிவித்தார்.
”யுக்ரேனின் எதிர்கால இராணுவத்தினரின் வடிவம் எவ்வாறாக இருக்கும் என்பதை கண்டுகொள்ள இந்த பயணம் ஏதுவாக இருக்கும்!” எனவும் மக்ரோன் குறிப்பிட்டார்.