CSK அணியில் முக்கிய பந்துவீச்சாளர் இல்லை - 17 வருட தோல்வி வரலாற்றை மாற்றுமா RCB?

28 பங்குனி 2025 வெள்ளி 09:18 | பார்வைகள் : 603
2025 ஐபிஎல் தொடர் மார்ச் 22ஆம் தேதி தொடங்கி பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
இன்று சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள 9 வது லீக் போட்டியில் CSK மற்றும் RCB அணிகள் விளையாட உள்ளது.
இரு அணிகளும் இதற்கு முன்னர், 33 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் 21 முறை சென்னையும், 11 முறை பெங்களூருவும் வெற்றி பெற்றுள்ளன.
இங்கு சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதியதில், முதலும் கடைசியாக 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் RCB அணி CSK-வை வீழ்த்தியது.
அதன் பிறகு தற்போது வரை சென்னை அணியின் கோட்டையானசேப்பாக்கத்தில், RCB அணியால் CSK அணியை அசைத்து பார்க்க முடியவில்லை.
இரு அணிகளும் 2025 ஐபிஎல் தொடரில் முன்னதாக ஆடிய லீக் போட்டியில் வெற்றி பெற்றுள்ளன.
துடுப்பாட்டத்தை பொறுத்தவரை இரு அணிகளுமே வலுவான நிலையில் உள்ளது.
RCB தரப்பில் KKRக்கு எதிரான போட்டியில், கோலி மற்றும் சால்ட் அரை சதம் அடித்தனர். அடுத்ததாக ரஜத் படிதார் மற்றும் லியாம் லிவிங்ஸ்டன், படிக்கல், ஜிதேஷ் ஷர்மா என பலமான துடுப்பாட்ட வரிசை வைத்துள்ளனர்.
CSK தரப்பில் கெய்க்வாட் ரவீந்திரா கடந்த போட்டியில் அரைசதம் அடித்து அசத்தினர். ராகுல் திரிபாதி, சிவம் துபே, தீபக் ஹூடா, சேம் கரண் ஆகியோர் ஒற்றை இலக்க ஓட்டத்தில் வெளியேறி ஏமாற்றம் அளித்தனர். இந்த போட்டியில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில் சென்னை அணி பெரியளவில் ஓட்டங்களை குவிக்கும்.
சேப்பாக்கம் மைதானம், பொதுவாக சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக மைதானம் என்பது சென்னை அணிக்கு கூடுதல் பலம். CSK அணியில் ஜடேஜா, அஸ்வின், நூர் அகமது என சுழலில் CSK வலுவாக உள்ளது.
அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளரான பதிரானா, காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக குணமடையாத நிலையில் அவர் இந்த போட்டியில் ஆட மாட்டார்.
இதனால் வேகப்பந்து வீச்சை கலீல் அகமது மற்றும் நாதன் எல்லீஸ் கவனித்தே கொள்வார்கள். சாம் கர்ரன் இடம் பெறவும் வாய்ப்பு உள்ளது.