உலகின் மிக நீளமான கடலடி இன்டர்நெட் கேபிளை சென்னையில் நிறுவிய Airtel

28 பங்குனி 2025 வெள்ளி 09:21 | பார்வைகள் : 1201
இந்தியாவில், ஏர்டெல் நிறுவனம் கடலுக்கு அடியில் உலகின் மிக நீளமான இன்டர்நெட் கேபிளை நிறுவியுள்ளது.
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான பார்தி ஏர்டெல் (Bharti Airtel), 2Africa Pearls கடலடி கேபிளை இந்தியாவில் நிறுவியுள்ளது.
Meta மற்றும் center3 உடன் இணைந்து, Airtel இந்தியாவில் இந்த கேபிளின் லேண்டிங் பார்ட்னராக செயல்படுகிறது.
2Africa Pearls, உலகின் மிக நீளமான 45,000 கிமீ கொண்ட 2Africa கடலடி இணைய இணைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
இது ஆசியா, ஆப்ரிக்கா, யூரோப் மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளை இணைக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த பிரம்மாண்ட திட்டத்திற்கு Bayobab, center3, China Mobile International, Meta, Orange, Telecom Egypt, Vodafone Group, WIOCC போன்ற முன்னணி நிறுவனங்கள் ஆதரவளிக்கின்றன. Alcatel Submarine Networks இந்த கேபிளை தயாரித்து நிறுவும் பொறுப்பை ஏற்றுள்ளது.
Airtel Business நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சரத் சின்ஹா, “இந்த 2Africa Pearls கேபிளை இந்தியாவில் கொண்டு வருவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். நாங்கள் சமீபத்தில் SEA-WE-ME-6 கேபிளையும் சென்னை, மும்பையில் நிறுவியுள்ளோம். எங்கள் நெட்வொர்க் நிலைத்தன்மையை உறுதி செய்ய மேலும் முதலீடு செய்ய உள்ளோம்,” என்ரூ தெரிவித்துள்ளார்.
Airtel நிறுவனத்தின் உலகளாவிய நெட்வொர்க் 4,00,000 கிமீக்கு மேல் விரிந்து 50 நாடுகளை இணைக்கிறது.
i2i, Europe India Gateway, SEA-ME-WE-4, IMEWE, AAG, Unity, MENA போன்ற பல முக்கிய கேபிள் திட்டங்களில் Airtel முதலீடு செய்துள்ளது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1