மியன்மார் மற்றும் தாய்லாந்தில் நிலநடுக்கம்! தரைமட்டமான கட்டிடங்கள்

28 பங்குனி 2025 வெள்ளி 13:57 | பார்வைகள் : 2951
மியான்மரில் இன்று (28) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த நிலநடுக்கமானது இன்று நண்பகல் 12.50 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 7.7ஆக பதிவாகி உள்ளளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வடக்கு மற்றும் மத்திய தாய்லாந்தின் தொலைதூரப் பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் பல கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\
மியன்மார் தலைநகரிலிருந்து 250 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சகாய்ங்க் நகரில் சுமார் 16 மற்றும் 18 கிலோ மீட்டர் பரப்பளவுக்கு இந்நிலநடுக்கம் பரவியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தாய்லாந்தின், பாங்கொக் நகரிலும் இன்று (28) 7.3 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தாய்லாந்திலும் உயரமான பல கட்டிடங்களில் இருந்து மக்கள் அச்சத்தில் வெளியே ஓடி வரும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025