லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்! - மக்ரோன் கண்டனம்!!

28 பங்குனி 2025 வெள்ளி 14:45 | பார்வைகள் : 1694
லெபனான் மீது இஸ்ரேல் ஒன்று மார்ச் 28, வெள்ளிக்கிழமை காலை தாக்குதல் மேற்கொண்டுள்ளது. இது போர் நிறுத்த விதிகளை மீறிய ஏற்றுக்கொள்ள முடியாத தாக்குதல் என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
லெபனானின் தெற்கு பகுதியில் இஸ்ரேல் இன்று காலை ரொக்கெட் லாஞ்சர் மூலம் தாக்குதல் மேற்கொண்டுள்ளது. பெய்ரூட் நகருக்கு அருகே இந்த தெற்கு புறநகரில் பல இடங்களில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இஸ்ரேலில் அண்மையில் ஏற்பட்ட பாரிய ரொக்கட் தாக்குதலுக்கு ஹிஸ்புல்லா அமைப்பு பொறுப்பல்ல என லெபனான் தெரிவித்திருந்தது. அதை அடுத்து அங்கு போர் நிறுத்த விதிமுறைகளை மீறி தாக்குதல்கள் இடம்பெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த தாக்குதல்களை ஏற்றுக்கொள்ள முடியாதது என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
லெபனானின் புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள ஜோசஃப் அவுன் இன்று பரிசுக்கு விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி மக்ரோனைச் சந்தித்து உரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.