Paristamil Navigation Paristamil advert login

Marché des Enfants Rouges - பரிசின் பழமையான சந்தை!!

Marché des Enfants Rouges - பரிசின் பழமையான சந்தை!!

17 மாசி 2017 வெள்ளி 10:30 | பார்வைகள் : 18579


பொதுமக்கள் பலர் கூடும் பொதுச் சந்தை அனைத்து நாட்டிலும், நகரங்களிலும் உண்டு.. சில வார இறுதி நாட்களில் கூடும் சந்தைகளும் உண்டு. இன்று பரிசில் தோன்றிய மிக பழமையான சந்தை குறித்து பார்க்கலாம்.
 
Marché des Enfants Rouges. பரிசின் மூன்றாம் வட்டாரத்தில் உள்ள இந்த சந்தை 1628 ஆம் ஆண்டு உருவானதாம். இந்த பேரை வாசியுங்களேன்... 'சிவப்பு குழந்தைகளுக்கான சந்தை' என அர்த்தம் வருகிறது இல்லையா!? தொண்டு பணியினை வெளிக்காட்டும் முகமாக இந்த பெயரை வைத்துள்ளார்களாம். 
 
புத்தம்புதிய ஃப்ரஷ் மரக்கறிகளை இங்கு ஏகத்துக்கும் விற்பனையாகின்றன. பழங்கள், பூக்கள் உட்பட அனைத்து உணவு வகைகளும் இங்கு கொட்டிக்கிடக்கின்றன. உள்ளூர் வாசிகள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் சந்தையை பார்வையிட்டு வாங்கிச்செல்கிறார்கள். 
 
இத்தாலியன் உணவு வகைகள், ஆர்கானிக் உணவுகள் ( கரிம உணவுகள்) போன்றவையும் இங்கு அதிகமாக விற்பனையாகின்றன. 
 
செவ்வாக்கிழமைகளில் காலை 8.30 மணியில் இருந்து  மாலை 7.30 மணிவரையும், ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8.30 மணியில் இருந்து மதியம் 2 மணிவரையும் திறந்திருக்கும். திங்கட்கிழமைகளில் விடுமுறை!! 
 
நீங்கள் வழக்கமாக செல்லும் சந்தை இது என்றாலும், பரிசின் மிக பழமையான ( கிட்டத்தட்ட 400 வருடங்கள் பழமையான) சந்தை என்பது ஆச்சரியமான தகவல் தான் இல்லையா??! இதுவரை இங்கு சென்றதே இல்லை என்றால்... முகவரியை குறித்து வைத்துக்கொள்ளுங்கள்... 39 rue de Bretagne, 75003 Paris Tel.. +33 (0) 1 40 11 20 40

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்