கருவாடு சம்பல்

29 பங்குனி 2025 சனி 09:28 | பார்வைகள் : 348
கூனி கருவாட்டில் காரசாரமான சம்பல் கிரேவி 10 நிமிடத்தில் செய்து சாப்பிடலாம், எப்படி செய்றது முழு தகவலும் கீழே இருக்கு.
கூனி என்பது இறால் போன்று சிறிய அளவில் இருக்கும், இந்த கூனி கருவாட்டில் கிரேவி, பொறித்து, சம்பல் வைத்து சாப்பிடலாம். சம்பல் செய்யும் முறையினை பார்க்கலாம
தேவையான பொருட்கள்;-இரண்டு கை அளவிற்கு கூனி கருவாடு, மூன்று காஞ்ச மிளகாய், தேங்காய், உப்பு, 10 சின்ன வெங்காயம், மூன்று பச்சை மிளகாய்.
செய்முறை;கூனி கருவாட்டினை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து வறுத்தெடுக்கவும், எந்த அளவிற்கு கூனி கருவாடு இருக்கிறதோ அதே அளவிற்கு தேங்காய் திருகி அதில் போட வேண்டும்.
பின்பு காயிந்த மிளகாயை அடுப்பில் சுட்டு, அதனை உரலில் வைத்து இடித்து தூளாக்கி அதனை கூனி கருவாட்டில் போட்டு நன்றாக பிசைந்து உரலில் போட்டு நன்றாக இடித்து பச்சை மிளகாய், சின்ன வெங்காயத்தினை சேர்த்து இடித்து கொண்டால் காரசாரமான கூனி சம்பல் கிரேவி தயாராகிவிடும்.