Paristamil Navigation Paristamil advert login

அமைதி மற்றும் நீதிக்கான ஸ்ரீலங்கா பரப்புரை அமைப்பின் பிரச்சார இயக்குநர்

 அமைதி மற்றும் நீதிக்கான ஸ்ரீலங்கா பரப்புரை அமைப்பின் பிரச்சார இயக்குநர்

29 பங்குனி 2025 சனி 15:58 | பார்வைகள் : 709


பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கு இலக்குவைக்கப்பட்ட தடைகள் மிகவும் முக்கியமான சாதனங்கள் என தெரிவித்துள்ள அமைதி மற்றும் நீதிக்கான ஸ்ரீலங்கா கம்பெய்ன் என்ற அமைப்பின் பிரச்சார யுவோன் ஸ்கோபீல்ட் உள்நாட்டு அமைப்புமுறை நீதியை நிலைநாட்டுவதற்கு தவறுகின்ற போது,குற்றவாளிகளிற்கு பதவிஉயர்வு அரசியல் பதவிகள் வழங்கப்படுகின்ற போது,சர்வதேச பொறிமுறைகள் முன்னரை விட முக்கியமானவையாக மாறுகின்றன என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு அரசியல் குற்றம்சாட்டப்பட்டவர்களை பாதுகாத்தாலும் ,பொறுப்புக்கூறலை காலவரையறையின்றி தள்ளிப்போட முடியாது என்ற செய்தியை தடைகள் அரசாங்கத்திற்கும் குற்றவாளிகளிற்கும் தெரிவிக்கின்றன என அவர் மேலும் தெரிவித்துள்ளார்
கிரவுண்ட்வியுசிற்கு வழங்கிய பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார்

கேள்வி
இந்த தடைகள் பயனுள்ளவையாக அமையும் என நீங்கள் கருதுகின்றீர்களா?
பதில்-ஆம் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கு இலக்குவைக்கப்பட்ட தடைகள் மிகவும் முக்கியமான சாதனங்கள்.அவைகளால் தாங்களாவே நீதியை வழங்கமுடியாவிட்டாலும், இந்த தடைகள் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுதலிற்கு பாரதூரமான விளைவுள்ளது என்ற செய்தியை தெரிவிக்கின்றன.
மேலும் இந்த தடைகள் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தவர்களிற்கும் உயிர்பிழைத்தவர்களிற்கும் சர்வதேச சமூகத்திடமிருந்து தேவையான அங்கீகாரத்தை வழங்குகின்றன, அவர்களின் துன்பங்கள் துயரங்கள் மறக்கப்படவில்லை என்ற உறுதிமொழியை இந்த தடைகள் வழங்குகின்றன.
தடைகள் குற்றவாளிகளை இராஜமந்திர ரீதியில் நிதிரீதியில் தனிமைப்படுத்த உதவியுள்ளன,அவர்களின் நடமாட்டத்தை குறைத்துள்ளன,குற்றவாளிகளை தொடர்ந்தும் காப்பாற்றும் உள்நாட்டு கட்டமைப்புகள் மீது அழுத்தங்களை திணித்துள்ளன.

கேள்வி-
தடைவிதிக்கப்பட்டவர்கள் பயணங்களை மேற்கொள்ள முடியாது - அதற்கு அப்பால் வேறு எப்படி இந்த தடைகள் அவர்களை பாதிக்கும்?
பதில்-
தடைகள் பயணத்தடைகளை விட வேறு விடயங்களிலும் தாக்கத்தை செலுத்துகின்றன,அவை பிரிட்டனில் உள்ள சொத்துக்களை முடக்குகின்றன,நிதிசார் ஈடுபாடுகளை தடுக்கின்றன,தடை செய்யப்பட்ட தனிநபர்களுடன் ஸ்தாபனங்களும்,தனிநபர்களும் ஈடுபாட்டை பேண முடியாது.
இலங்கையின் சிரேஸ்ட அதிகாரிகள் பலர் சர்வதேச தொடர்புகளை பேணுகின்றனர், தங்களின் சர்வதேச கௌரவத்தை முக்கிய விடயமாக கருதுகின்றனர்.தடைகள் இந்த நலன்கள் மீது நேரடி தாக்கத்தை செலுத்துகின்றன.
இந்த தடைகளிற்குகுறியீட்டு முக்கியத்துவமும் உள்ளது.தடைவிதிக்கப்பட்ட நபர்கள் உள்நாட்டில் அனுபவிக்கும் சட்டபூர்வமான தன்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதும்,அதிகாரத்தில் உள்ளவர்களிற்கு பொறுப்புக்கூறல் என்பது சர்வதேச முன்னுரிமைக்குரிய விடயமாக உள்ளது என்ற செய்தியை அனுப்புவதுமாகும்.

கேள்வி-
யுத்த குற்றச்சாட்டுகளிற்கு உள்ளானவர்களிற்கு  தொடர்ந்து வந்த ஆட்சியாளர்கள் முக்கியமான பதவிகளை வழங்கியுள்ளனர்-அரசாங்கங்களின் ஆதரவுள்ளவர்களிற்கு எதிராக தடைகள் பயனுள்ளவையாக அமையுமா?
பதில் - ஆம் இந்த நோக்கத்திற்காகவே தடைகள் அவசியம்,உள்நாட்டு அமைப்புமுறை நீதியை நிலைநாட்டுவதற்கு தவறுகின்ற போது,குற்றவாளிகளிற்கு பதவிஉயர்வு அரசியல் பதவிகள் வழங்கப்படுகின்ற போது,சர்வதேச பொறிமுறைகள் முன்னரை விட முக்கியமானவையாக மாறுகின்றன.
உள்நாட்டு அரசாங்கம் ஏற்றுக்கொள்வது உலகளாவிய ஏற்றுக்கொள்ளுதலிற்கு சமமானதில்லை என்ற செய்தியை தெரிவிப்பதன் மூலம் தடைகள் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுதலில் குழப்பத்தை ஏற்படுத்துகி;ன்றன.
உள்நாட்டு அரசியல் குற்றம்சாட்டப்பட்டவர்களை பாதுகாத்தாலும் ,பொறுப்புக்கூறலை காலவரையறையின்றி தள்ளிப்போட முடியாது என்ற செய்தியை தடைகள் அரசாங்கத்திற்கும் குற்றவாளிகளிற்கும் தெரிவிக்கின்றன.

கேள்வி - பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை வழங்குமாறு இலங்கை அரசாங்கத்தி;ற்கு அழுத்தத்தை கொடுப்பதற்காக சர்வதேச சமூகம் வேறு எந்த நடவடிக்கையை எடுக்கலாம்?
பதில் -
பல நடவடிக்கைகளை எடுக்கலாம்.
உலக நாடுகள் உலகளாவிய நியாயாதிக்க வழக்குகளிற்கு ஆதரவளிக்கலாம்,அவற்றை விரிவுபடுத்தலாம்;,இதன் மூலம் குற்றவாளிகளிற்கு எதிராக சர்வதேச அளவில் விசாரணைகளை முன்னெடுக்கலாம்.
ஆதாரங்களை பாதுகாத்து துஸ்பிரயோகங்களை கண்காணிப்பதற்கான ஐக்கிய நாடுகளின் பொறிமுறையான ஸ்ரீலங்கா பொறுப்புக்கூறல் திட்டம் போன்றவற்றை உலக நாடுகள் வலுப்படுத்தவேண்டும்.
சர்வதேச நிதி நிறுவனங்களும் உதவி வழங்கும் சமூகத்தினரும் மனித உரிமை விடயங்களில் முன்னேற்றம் ஏற்பட்டாலே நிதி உதவி என்ற நிபந்தனைகளை விதிக்கலாம்.
மிக முக்கியமாக நாடுகள் தங்கள் வெளிவிவகார கொள்கையில் பாதிக்கப்பட்டவர்கள் - தப்பிப்பிழைத்தவர்களின் குரல்களை உள்வாங்கலாம்.காணாமல்போனவர்களின் குரல்களைசெவிமடுத்து,நீதிக்கான அவர்களின் வேண்டுகோள்களை வலுப்படுத்தலாம்.

நன்றி virakesari

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்