Paristamil Navigation Paristamil advert login

Musée du quai Branly - Jacques Chirac - சில தகவல்கள்!!

Musée du quai Branly - Jacques Chirac - சில தகவல்கள்!!

14 மாசி 2017 செவ்வாய் 11:30 | பார்வைகள் : 18991


பிரெஞ்சு தேசம் 'அருங்காட்சியகம்' அமைத்து பாதுகாக்கும் பொக்கிஷங்களில்... நிச்சயமாக பிரெஞ்சை சேர்ந்த பொருட்கள் மட்டும் இல்லை.. ஆஃபிரிக்க, அமெரிக்க.. ஏன் இலங்கை இந்திய பொருட்கள் கூட உண்டு. எங்கள் ஊர் காளி அம்மனில் இருந்து.. கல்லுப்பிள்ளையார் வரை பாதுகாக்கிறது பிரெஞ்சு தேசம்!!
 
இதோ... இன்று பரிசில் உள்ள ஒரு அருங்காட்சியகம், பிரான்சின் பொக்கிஷங்களை தவிர்த்து மேலும் பல தேசத்து கலை இலக்கிய அடையாளங்களை பாதுகாக்கிறது. பார்க்கலாம்..!
 
Quai Branly அருங்காட்சியகம் 2006 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டில் 1.3 பில்லியன் பார்வையாளர்களை சந்தித்துள்ளது. 
 
ஆப்பிரிக்கா, ஆசியா, அமெரிக்கா, Oceania ஆகிய தேசங்களை சேர்ந்த 4,50 000 பொருட்கள் இங்கு காட்சிக்கு உண்டு. 
 
7ஆம் வட்டாரத்தில், சென் நதிக்கு மிக அருகில் உள்ள இந்த அருங்காட்சியகம், ஏனைய தேசங்களின் கலை கலாச்சாரங்களை மாணவர்கள் பயிலும் ஆராச்சி கூடமாகவும் இருக்கிறது. 
 
மர்மத்தீவான 'ஈஸ்ட்டர்' தீவில் இருந்து 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பெரிய கற்சிலை ஒன்றில் தலை இங்கு உண்டு. ஈஸ்ட்டர் தீவில் இருக்கும் மர்மச் சிலைகள் குறித்து கேள்விப்பட்டீர்கள் என்றால் நிச்சயம் இந்த சிலையை பார்க்க அவசர அவசரமாக இந்த அருங்காட்சியகத்துக்கு விரைவீர்கள். கூகுள் செய்து பார்க்கவும்!! (Key Words : Easter Island)
 
2006 இல் திறந்த அருங்காட்சியகத்தில் நான்கரை இலட்சம் 'மாஸ்ட்டர் பீஸ்'கள் எப்படி வந்தது என ஆச்சரியமாக இருக்கிறதா??  Musée national des Arts d'Afrique et d'Océanie மற்றும் Musée de l'Homme ஆகிய இரு அருங்காட்சியகங்களையும் மூடிவிட்டு, அங்கிருக்கும் பொருட்களை இங்கு கொண்டு வந்துவிட்டார்கள். 
 
உண்மையில் இங்கு அளவு கணக்கற்ற பொருட்கள் உண்டு. அவற்றை எல்லாம் காட்சிப்படுத்த முடியாது என்பதால் குறைந்த அளவு காட்சிப்படுத்தியுள்ளனர். எப்படி என்றால் புகைப்பட தொகுப்பு மட்டும் 7 இலட்சங்கள் உண்டாம். மேலும் 320,000 ஆவணங்கள், 10,000 பண்டைய இசைக்கருவிகள் தவிர 300,000 கைவினைப்பொருட்களும் உண்டாம். அடேங்கப்பா... இதெல்லாம் நாங்க எப்போது பார்ப்பது என குழம்ப வேண்டாம். வருடா வருடம் மாற்றிக்கொண்டே இருப்பார்கள். நீங்கள் பார்வையிட்டுக்கொண்டிருக்கலாம்!!
 
காலை 11 மணியில் இருந்து மாலை 7 மணிவரை திறந்திருக்கும் இந்த அருங்காட்சியகம். முகவரி : 37 Quai Branly, 75007 Paris... பிறகென்ன... ஒருதடவை சென்று வாருங்களேன்!!

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்