பரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்றவருக்கு - அகதி விசா!!

30 பங்குனி 2025 ஞாயிறு 07:00 | பார்வைகள் : 2395
பரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற கொங்கோ நாட்டைச் சேர்ந்த வீரர் ஒருவருக்கு பிரான்சில் அகதி விசா வழங்கப்பட்டுள்ளது.
24 வயதுடைய Freddy Mayala என்பவருக்கே இந்த புகலிட கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு விசா வழங்கப்பட்டுள்ளது. கொங்கோவில் பயிற்சிவிப்பு நிலையங்கள் மிக மோசமாக இருப்பதாகவும், போதிய நிதியினை அரசினால் செலவிட முடியவில்லை எனவும் தெரிவித்து அவர் புகலிடக்கோரிக்கையை முன்வைத்திருந்த நிலையில், அதனை தேசிய புகலிடச் சட்ட நீதிமன்றம் (Cour nationale du droit d'asile) ஏற்றுக்கொண்டுள்ளது.
10 வருட புதுப்பிக்கப்படக்கூடிய வதிவிட உரிமை (carte de séjour) வழங்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற மேலும் பல நாடுகளைச் சேர்ந்த வீரர்கள், ஓடி ஒளிந்துகொண்டதாகவும், அவர்கள் தங்கள் நாடுகளுக்குத் திரும்பாமல் அகதிகளாக வசிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.