Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் முதியோர், பயனாளர்களின் கொடுப்பனவை அதிகரிக்க திட்டம்

இலங்கையில் முதியோர், பயனாளர்களின் கொடுப்பனவை அதிகரிக்க திட்டம்

30 பங்குனி 2025 ஞாயிறு 11:58 | பார்வைகள் : 909


முதியோருக்கான கொடுப்பனவு மற்றும் பெறுவோரின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சினால் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கொடுப்பனவை பெற்றுக்கொள்ளும் பயனாளர்களின் எண்ணிக்கையை சுமார் 10 இலட்சம் வரை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பிரதியமைச்சர் வசந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சுக்கு இம்முறை வரவு-செலவுத் திட்டத்தில் அதிகளவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனூடாக சுமார் 08 இலட்சம் பேருக்கு இதுவரையில் வழங்கப்பட்ட 3,000 ரூபாய் முதியோர் கொடுப்பனவு 5,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், முதியோர் கொடுப்பனவு பெறுவோரின் எண்ணிக்கையை 10 இலட்சமாக அதிகரிப்பதற்கும் அமைச்சு தீர்மானித்துள்ளதாகவும் பிரதியமைச்சர் வசந்த ஜயதிஸ்ஸ கூறியுள்ளார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்