Paristamil Navigation Paristamil advert login

பிரெஞ்சு சிறைச்சாலைகளுக்கு பின்னால்....!!

 பிரெஞ்சு சிறைச்சாலைகளுக்கு பின்னால்....!!

10 மாசி 2017 வெள்ளி 12:30 | பார்வைகள் : 19121


இன்றைய பிரெஞ்சு புதினத்தில்... பிரான்சில் இருக்கும் சிறைச்சாலைகள் குறித்து சில 'அடடா' தகவல்களைப் பார்க்கலாம்!!

 

பிரெஞ்சு சிறைச்சாலைகளுக்கு Ministère de la Justice et des Libertés (நீதித்துறை அமைச்சு) தான் பொறுப்பு! இவர்களின் கண்காணிப்பில் தான் அனைத்தும் இயங்குகிறது. 

 

பிரெஞ்சு சிறைகளை நிர்வாகிப்பது Direction de l'Administration Pénitentiaire ஆகும். Philippe Galli என்பவர் இதன் தலைமை அதிகாரி! (Directeur de l'Administration Pénitentiaire)

 

கடந்த 2016 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 1ம் திகதி எடுக்கப்பட்டிருந்த கணக்கின் படி, பிரெஞ்சு சிறைகளில் 68,514 பேர் கைதிகளாக உள்ளனர். 

 

ஒரு ஆச்சரியமான தகவல் தெரியுமா..?? ஒவ்வொரு ஒரு இலட்சம் பிரெஞ்சு மக்களிலும், 101 பேர் சிறையில் இருக்கின்றனர். பிரெஞ்சு மக்கள் தொகை 67.6 மில்லியன். இப்போது கணக்கு புரிகிறதா..??

 

சிறைக்கைதிகளில் 3.3 வீதமானவர்கள் மட்டுமே பெண்கள்!! யூதர்கள் மற்றும் சிறுவர்கள் 1.1 வீதத்தினர். கைதிகளில் வெளிநாட்டினர், பிரெஞ்சு குடியுரிமை இல்லாதவர்கள் 21.7 வீதத்தினர் ( 2014 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வின்படி..)

 

கடந்த 2000 ஆம் ஆண்டில் 48,000 கைதிகளும், 82 சிறைச்சாலைகளும் இருந்தன.... 16 வருடங்கள் கழித்து.. தற்போது 114 சிறைச்சாலைகளும்... 68 ஆயிரத்து சொச்சம் கைதிகளும் உள்ளனர். என்னவொரு முன்னேற்றம்!!??

 

கடத்தல்காரர்கள், கொலைகாரன், கொள்ளைக்கும்பல் தலைவன், பயங்கரவாதி,... என ஒட்டுமொத்த குற்றவாளிகளும் உள்ளே இருந்தும்... குற்றங்கள் இன்னமும் தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறது!!

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்