இலங்கையில் நாளையும் எச்சரிக்கை மட்டத்துக்கு உயரும் வெப்பநிலை!

30 பங்குனி 2025 ஞாயிறு 13:06 | பார்வைகள் : 969
இலங்கையின் பல பகுதிகளில் மனித உடலால் உணரக்கூடிய வெப்பநிலையானது நாளைய தினம் எச்சரிக்கை மட்டத்தை எட்டக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அதன்படி, வடக்கு, வடமத்திய, வடமேல் ,சப்ரகமுவ ,தென் மற்றும் மேல் மாகாணங்களிலும் திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் நாளைய தினம் (31) வெப்பநிலை 'கவனம் செலுத்த வேண்டிய' அளவை எட்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
எனவே, பொது மக்கள் போதியளவு நீர் அருந்துமாறும், இது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், வயோதிபர்கள், சிறுவர்கள் மற்றும் நோயாளர்கள் குறித்தும் மிகுந்த அவதானம் செலுத்துமாறு கோரப்பட்டுள்ளது.