Paristamil Navigation Paristamil advert login

'எம்புரான்' படத்திற்காக மன்னிப்பு கேட்ட மோகன்லால்..!

'எம்புரான்' படத்திற்காக மன்னிப்பு கேட்ட மோகன்லால்..!

30 பங்குனி 2025 ஞாயிறு 15:00 | பார்வைகள் : 2168


மோகன்லால் நடித்த ‘எம்புரான்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தில் சில சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக ஒரு சில இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். குறிப்பாக குஜராத்தில் நடந்த நிகழ்வு குறித்த காட்சிகளுக்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மோகன்லால் தனது பேஸ்புக் பக்கத்தில் இதற்காக மன்னிப்பு கோரி நடந்த தவறுக்கு நானும் எனது படக்குழுவினரும் பொறுப்பு ஏற்கிறோம் என்று தெரிவித்துள்ளார். அவர் தனது மன்னிப்பு பதிவில் கூறியிருப்பதாவது:

’லூசிபர்’ படத்தின் இரண்டாம் பகுதியான 'எம்புரான்' திரைப்படத்தின் சிந்தனை மற்றும் உருவாக்கத்தில் சில அரசியல்-சமூக விஷயங்கள், என்னை நேசிப்பவர்களில் சிலருக்கு பெரும் மனவருத்தத்தை ஏற்படுத்தியதாக அறிந்தேன்.

ஒரு கலைஞராக, என் எந்த திரைப்படமும் எந்த ஒரு அரசியல் இயக்கத்தையோ, கருத்துகளையோ, மதக்குழுவையோ எதிர்ப்பதில்லை என்பதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது.

அதனால், என் அன்பு ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ள மனவருத்தத்தில் எனக்கும் 'எம்புரான்' குழுவிற்கும் உண்மையான வருத்தம் இருக்கிறது. மேலும், அதன் பொறுப்பு இந்த படத்திற்கு பின்னால் பணியாற்றிய அனைவருக்கும் இருப்பதை முழுமையாக உணர்கிறோம்.

அதற்காக, இப்படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தீர்மானித்து விட்டோம்.கடந்த நாற்பது ஆண்டுகளாக, உங்களில் ஒருவராக நான் என் திரைப்பட வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறேன். உங்கள் அன்பும் நம்பிக்கையும் தான் எனக்கு பலம். அதற்கு அப்பாற்பட்ட மோகன்லால் யாரும் இல்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன்...இவ்வாறு மோகன்லால் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்