இந்தோனேசியாவில் நிலநடுக்கம்

30 பங்குனி 2025 ஞாயிறு 16:02 | பார்வைகள் : 3399
இந்தோனேசியாவில் இன்று காலை 5.4 மெக்னிடியூட் அளவில் நில அதிர்வு ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்நாட்டின் வடக்கு சுமத்ராவில் காலை 8.28 மணிக்கு இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது.
இந்த நில அதிர்வால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
மியான்மாரில் சக்திவாய்ந்த நில அதிர்வினால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இந்தோனேசியாவில் ஏற்பட்ட நில அதிர்வினால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.