Paristamil Navigation Paristamil advert login

ஷேன் வார்னே மரணத்திற்கு காரணம் என்ன…? அதிர்ச்சி தகவல்

ஷேன் வார்னே மரணத்திற்கு காரணம் என்ன…? அதிர்ச்சி தகவல்

31 பங்குனி 2025 திங்கள் 12:51 | பார்வைகள் : 970


ஷேன் வார்னே மரணம் குறித்த சில தகவல்களை தாய்லாந்து காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் ஜாம்பவானாக வலம் வந்தவர் ஷேன் வார்னே.

சர்வதேச கிரிக்கெட்டின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஷேன் வார்னே, அவுஸ்திரேலியா அணிக்காக 1992 முதல் 2007 வரை ஆடி 1001 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற பின்னர், ஐபிஎல் தொடரில் 2008 முதல் 2011 வரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணித்தலைவராக செயல்பட்டார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு நண்பர்களுடன் சேர்ந்து தாய்லாந்துக்கு சுற்றுலா சென்ற ஷேன் வார்ன், அங்குள்ள அறையில் இறந்து கிடந்தார். ஷேன் வார்னே மாரடைப்பால் உயிரிழந்தார் என கூறப்பட்டது.

இந்நிலையில், ஷேன் வார்னே உயிரிழந்த போது அவரது உடலுக்கு அருகே உறவுக்கு நீண்ட நேரம் பயன்படுத்தக்கூடிய காமகிரா (Kamagra) என்ற மாத்திரை பாட்டில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து கூறிய அதிகாரிகள், "ஷேன் வார்னே உயிரிழந்தபோது அவரது உடல் அருகே காமகிரா என்ற போதைப்பொருள் இருந்தது. இந்த பாட்டிலை உடனடியாக அகற்றுமாறு எங்களது மேலதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன் பின்னணியில் அவுஸ்திரேலியா அதிகாரிகள் கூட இருக்கலாம். வார்னே அவுஸ்திரேலியா அணியின் ஜாம்பவான் என்பதால், அவரது பெயருக்கு கலங்கம் ஏற்படுத்த விரும்பாமல் இருந்திருக்கலாம்.

காமக்ரா பாட்டிலில் இருந்து அவர் எவ்வளவு எடுத்து கொண்டார் என்பது தெரியவில்லை. மேலும் அந்த அறையில் வாந்தி மற்றும் ரத்தக்கறை இருந்தது" என தெரிவித்துள்ளார்.

அவரின் மரணத்திற்கு இந்த மாத்திரைகள் பயன்படுத்தியதுதான் காரணமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்