Paristamil Navigation Paristamil advert login

La Mort aux Juifs - யூதர்களுக்கு மரணமா??!

La Mort aux Juifs - யூதர்களுக்கு மரணமா??!

7 மாசி 2017 செவ்வாய் 10:30 | பார்வைகள் : 19617


பிரெஞ்சு தேசத்தில் பெயர்களுக்கு பஞ்சமா என்ன?? சில கிராமங்களின் அல்லது நகரங்களின் பெயர்களை கேட்டால்.., தலையே வெடித்துவிடும்!! சில குறிப்பிட முடியாத பெயர்களும் உண்டு. இதோ... இந்த பெயரை பாருங்களேன்.. La Mort aux Juifs என ஒரு கிராமம்!! 

 

La Mort aux Juifs என்றால் 'யூதர்களின் மரணம்' என அர்த்தம். யூதர்கள் மேல் இந்த கிராமத்தினருக்கு என்ன கோபம்...? அப்படியெல்லாம் ஒன்றுமில்லை... 14 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் இந்த ஊருக்கு பெயர் la mare au juin (பிரெஞ்சு மொழியின் பழமையான வார்த்தைகளில் ஒன்று) அதன் பின்னர்... 14 ஆம் நூன்ற்றாண்டில் மேலே குறிப்பிட்ட பெயர் வைக்கப்பட்டது. சிலவேளைகளில் தவறான புரிதல்களின் பொருட்டு யூதர்கள் மேல் கோபம் ஏற்பட்டிருக்கலாம் இந்த கிராமத்தினருக்கு என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். சில வேளைகளில் mare எனும் வார்த்தை மருவி.., mort (மரணம்) என்றாகியிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

 

பின்னர் பல தடவைகள் இந்த பெயரை மாற்றக்கோரி மனுக்கள் பறந்தன. 1992 ஆம் ஆண்டு ஒருதடவை இந்த பெயரை மாற்றச்சொல்லி கோரிக்கை வைக்கப்பட்டது. பின்னர் ஜனவரி 2015 ஆம் ஆண்டு என்ன ஆனது தெரியுமா...?? இந்த ஊர் இருந்தால் தானே பிரச்சனை என...  கிராமத்தை Les Croisilles க்கும் La Dogetterie க்கும் பிரித்து கொடுத்துவிட்டார்கள்!! அட...!! 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்