Paristamil Navigation Paristamil advert login

UPI, ATM மூலம் இனி PF பணத்தை எடுக்கலாம்.., எப்படி தெரியுமா?

UPI, ATM மூலம் இனி PF பணத்தை எடுக்கலாம்.., எப்படி தெரியுமா?

31 பங்குனி 2025 திங்கள் 12:59 | பார்வைகள் : 3730


PF கணக்கில் இருந்து ஏடிஎம் மற்றும் யுபிஐ மூலம் பணம் எடுக்கும் வசதி நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வருங்கால வைப்புநிதி கணக்கை தொழிலாளர்கள் எளிதாக கையாளும் வகையில் EPFO 3.0 என்ற தொழில்நுட்பம் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட உள்ளது.

இதுகுறித்து செய்தி நிறுவனத்துக்கு மத்திய தொழிலாளர் நலத்துறை செயலாளர் சுமிதா தவ்ரா விளக்கம் அளித்துள்ளார்.

புதிய தொழில்நுட்பத்தின் மூலம், வங்கி சேவைக்கு இணையாக மிகப்பெரிய மாற்றத்துடன் வருங்கால வைப்புநிதி அமைப்பு செயல்படும் என தெரிவித்தார்.

வங்கிக் கணக்கில் இருப்பை பார்ப்பது போல, யுபிஐ செயலிகள் மூலமாக கணக்கில் உள்ள இருப்பை தெரிந்துகொள்ள முடியும்.

தானியங்கி முறை மூலம் ஒரு லட்சம் ரூபாய் வரை சில நிமிடங்களில் அல்லது சில மணி நேரங்களில் எடுக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தேவையான வங்கிக் கணக்கிற்கும் பணத்தை மாற்றிக் கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.

பிரத்யேக அட்டையை பயன்படுத்தி ஏடிஎம் மூலமாக எடுத்துக் கொள்ள முடியும் என தெரிவிதித்துள்ளார்.

அவர், புதிய நடைமுறை மே மாத இறுதி அல்லது ஜூன் மாதத்தில் நடைமுறைக்கு வரும் எனவும் தொழிலாளர் நலத்துறை செயலாளார் சுமிதா தவ்ரா கூறியுள்ளார்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்