மூன்றாம் உலகப்போர் குறித்து பிரபல ஜோதிடக்கலைஞர் விடுத்துள்ள எச்சரிக்கை

31 பங்குனி 2025 திங்கள் 13:22 | பார்வைகள் : 508
கோவிட் குறித்து துல்லியமாக கணித்த ஜோதிடக்கலைஞர் ஒருவர், மூன்றாம் உலகப்போர் வெடிக்கும் அபாயம் உருவாகிவருவதாக எச்சரித்துள்ளார்.
கோவிட், பிரித்தானிய மகாராணியார் இரண்டாம் எலிசபெத்தின் மரணம், உக்ரைன் ஊடுருவல் போன்ற விடயங்களை துல்லியமாக கணித்ததால், வாழும் நாஸ்ட்ரடாமஸ் என அழைக்கப்படுபவர் பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஜோதிடக்கலைஞரான ஏதோஸ் (Athos Salomé).
ஏதோஸ், தற்போது மூன்றாம் உலகப்போர் வெடிக்கும் அபாயம் குறித்து எச்சரித்துள்ளார்.
வரலாற்றில், சின்ன விடயங்களே உலகப்போர் வெடிக்கக் காரணமாக அமைந்ததை சுட்டிக்காட்டுகிறார் ஏதோஸ்.
ஆஸ்திரிய ஹங்கேரிய பேரரசின் வாரிசான ஃபிரான்ஸ் பெர்டினாண்ட் (Archduke Franz Ferdinand) என்பவர் கொல்லப்பட்ட விடயமே முதல் உலகப்போர் துவங்க காரணமாக அமைந்தது.
போலந்து ஊடுருவல் இரண்டாம் உலகப்போர் துவங்க காரணமாக அமைந்தது. தற்போது இதேபோல சின்னச் சின்ன மோதல்கள் ஆங்காங்கு நடந்துகொண்டே இருக்கின்றன.
குறிப்பாக, ஜனவரியில் லாத்வியாவுக்கும் ஸ்வீடனுக்கும் இடையில் கடலுக்கடியில் செல்லும் ஆப்டிக் கேபிள்கள் சேதப்படுத்தப்பட்டதையும், டிசம்பர் மாதம், பின்லாந்து எஸ்தோனியாவுக்கிடையே கடலுக்கடியில் செல்லும் மின்சார மற்றும் தொலைதொடர்பு கேபிள்களை சேதப்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் பின்லாந்து பொலிசார் ரஷ்ய எண்ணெய் டேங்கர் ஒன்றை கைப்பற்றிய விடயத்தையும் சுட்டிக்காட்டுகிறார் ஏதோஸ்.
ஆக, பால்டிக் கடலில், கண்ணுக்குத் தெரியாத ஒரு போர் வெடித்துள்ளது என்கிறார் ஏதோஸ்.
கடலுக்கடியில் செல்லும் இந்த கேபிள்கள் நாகரீக யுகத்தில் தொலைதொடர்புக்கு அத்தியாவசியமான அடிப்படை விடயங்கள்.
அவை சேதப்படுத்தப்படும்போது ராணுவம் முதல் பல்வேறு டிஜிட்டல் அமைப்புகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. அதனால் பெரும் பொருளாதார நிலையற்றதன்மையும் உருவாகக்கூடும்.
கேபிள்கள் சேதப்படுத்தப்பட்டது சதிச் செயல் என தெரியவந்தால் நேட்டோ எப்படி பதிலடி கொடுக்கும்? ரஷ்யா மீது நேரடியாக குற்றம் சாட்டினால், ரஷ்யா எப்படி ரியாக்ட் செய்யும்?
தென் சீனக்கடலில் உருவாகியுள்ள பதற்றம் எதிர்காலத்தில் சீன அமெரிக்க மோதலாக வெடித்தால் என்ன ஆகும்?
ஆகவே, இதுபோல் கடலுக்கடியில் செல்லும் கேபிள்களை சேதப்படுத்துதல், தென் சீனக்கடலில் உருவாகிவரும் பதற்றம் போன்ற விடயங்கள் கூட மூன்றாம் உலகப்போருக்கு காரணமாக அமைந்துவிடக்கூடும் என எச்சரிக்கிறார் ஏதோஸ்.