பர்மா நிலநடுக்கம் : இரண்டு பிரெஞ்சு நபர்கள் பலி!!
31 பங்குனி 2025 திங்கள் 13:54 | பார்வைகள் : 5250
பர்மாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இரண்டு பிரெஞ்சு நபர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மார்ச் 28 வெள்ளிக்கிழமை பர்மாவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. 2,056 பேர் இதுவரை கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படும் நிலையில், அவற்றில் இரண்டு பிரெஞ்சு நபர்களும் இருப்பதாக பிரான்சின் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அவர்களின் பெயர் விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
●●
• பர்மா நிலநடுக்கம் 7.7 ரிக்டர் அளவில் பதிவானது.
• பலி எண்ணிக்கை 2,056 பேரை எட்டியுள்ளது.
• 3,900 பேர் காயமடைந்துள்ளனர்.
• 270 பேர் காணாம போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
• பலி எண்ணிக்கை மேலும் 1,000 பேரால் அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.


























Bons Plans
Annuaire
Scan