Paristamil Navigation Paristamil advert login

மீண்டும் இணைந்த மாமன்னன் கூட்டணி….

மீண்டும் இணைந்த மாமன்னன் கூட்டணி….

31 பங்குனி 2025 திங்கள் 14:08 | பார்வைகள் : 629


கடந்த 2023 ஆம் ஆண்டு உதயநிதி, வடிவேலு, பகத் பாஸில் ஆகியோரின் நடிப்பிலும், மாரி செல்வராஜின் இயக்கத்திலும் மாமன்னன் எனும் திரைப்படம் வெளியானது. சாதிய ஒடுக்குமுறை குறித்து பேசப்பட்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதே சமயம் வடிவேலு மற்றும் பகத் பாசிலின் நடிப்பும் பெரிய அளவில் பேசப்பட்டது. 

இந்நிலையில் இவர்களது கூட்டணி மாரீசன் எனும் திரைப்படத்தில் மீண்டும் இணைந்துள்ளது. இந்த படத்தை ஆர். கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். சூப்பர் குட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் அதன்படி படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே தொடங்கி சென்னை போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன. 

இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் இந்த படத்தின் கதை எப்படி இருக்கும்? இதில் வடிவேலு மற்றும் பகத் பாசலின் கதாபாத்திரம் எப்படி இருக்கும் என்பதை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் இப்படமானது 2025 ஜூலை மாதத்தில் திரைக்கு வரும் என படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த போஸ்டரும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்