மாவீரன் நெப்போலியன் உண்மையில் குள்ளமானவரா?
5 மாசி 2017 ஞாயிறு 10:30 | பார்வைகள் : 19002
மில்லியன் டொலர் கேள்வி!! ஏழேழு தேசங்களையும் வென்றெடுத்த மாவீர சக்கரவர்த்தி நெப்போலியன் 'குள்ளமானவர்' எனும் கருத்து ஊர் உலகமெல்லாம் பரவியுள்ளது. உண்மையில் நெப்போலியன் குள்ளமானவரா??!
'உயரம்' குறித்த சர்ச்சை முதலில் ஏன் தோன்றியது?? வரலாறு எங்கும் மாவீரன் நெப்போலியன் 5.2 அடி உயரம் கொண்டவர் என தெரிவிக்கப்பட்டு... பின்னர் அது பரவப்பட்டிருந்தது. 5.2 அடி உயரம் என்பது அப்போதைய ஏனைய தேசத்து வீரர்களுடன் ஒப்பிடும் போது குள்ளமான மனிதராக தெரிந்தது. ஆனால் பின்னர் பல ஆதாரங்கள் ஆராய்ச்சிகள் மூலம் அவரின் உண்மையான உயரம் கணிக்கப்பட்டது. அதன் பின்னர் நெப்போலியனின் உயரம் 1.68 மீட்டர் அதாவது 5.6 ஆடி உயரம் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் உண்மை என்னவென்றால் 'குள்ளம்' என சொல்வதற்கு அங்கு எதுவும் இல்லை... காரணம் அப்போதைய பிரெஞ்சு மக்களின் சராசரி உயரம் அதுவாகத்தான் இருந்தது.
ஆனால் இந்த 'குள்ளம்' எனும் வார்த்தை மாவீரன் நெப்போலியனை நிலைகுலைய வைத்தது என்பது உண்மை. மாவீரன் தன் கடைசி காலத்தில் எலிகளை கண்டு கூட பயந்தார் என சில தகவல்கள் உண்டு. சமூகத்தை கண்டு எழும் அச்சம் எனும் மிக அபூர்வமான பாதிப்புக்கு உள்ளாகியிருந்தார் நெப்போலியன். ஆனால் மாவீரன் நெப்போலியன் குள்ளமானவர் இல்லை!!