Paristamil Navigation Paristamil advert login

L’église Saint-Eustache - சில தகவல்கள்!!

L’église Saint-Eustache - சில தகவல்கள்!!

2 மாசி 2017 வியாழன் 11:35 | பார்வைகள் : 19383


'பழசு வேறு பழமை வேறு!' - வைரமுத்து சொன்னது. இதை யார் நம்புகிறார்களோ இல்லையோ... பிரெஞ்சு அரசு விடாப்பிடியாக நம்புகிறது! பழையது எங்கிருந்தாலும் தேடி எடுத்து பத்திரப்படுத்திக்கொள்கிறார்கள். புராதன கட்டிடங்களை எல்லாம் காலாகாலமாக பாதுகாக்கின்றனர். இன்று பிரெஞ்சு புதினத்தில் 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட L’église Saint-Eustache தேவாலயம் குறித்து பார்க்கலாம். 
 
உங்களுக்குத் தெரிந்தே இருக்கும்... பரிசின் முதலாம் வட்டாரத்தில் கருப்பு கூரையுடன் 'பட்டர்' கலரில் ஜொலிக்கும் கத்தோலிக்க தேவாலயம். இன்றுவரை பயன்பாட்டில் இருக்கும் இந்த தேவாயலம் கட்டி முடிக்க 1532 ஆம் ஆண்டு முதல் 1632 ஆம் ஆண்டுவரையான 100 வருடங்களை எடுத்துக்கொண்டார்களாம். 
 
ரோமன் கத்தோலிக்க தேவாலயங்களுக்கு இந்த கட்டிடம் முன் மாதிரியாக திகழ்கிறது. உயர தூண்களும்... வளைந்த கூரைகளும் என 'தேவாலயங்களுக்கான' மாதிரியான திகழ்கிறது. இந்த தேவாலய வடிவில் தான் பின்னர் பல தேவாலயங்கள் உருப்பெற்றது. 
 
இந்த தேவாலயத்தின் வரவேற்பில் உள்ள Chapel of the Virgin, 1640 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. பின்னர் 1801 ஆம் ஆண்டு மீள் நிர்மாணம் செய்து இப்பகுதியின் மூன்று பகுதிகளிலும் The Virgin of the star sailors, The triumphant Virgin adored by angels, The Virgin comforting the afflicted என மூன்று ஓவியங்கள் வரையப்பட்டன. 
 
மிக முக்கியமாக, காற்றில் இயங்கும் இசைக்கருவியான pipe organ இங்கு எண்ணிக்கையில் 8,000 பொருத்தப்பட்டுள்ளன. இந்த கருவி அதிகம் பொருத்தப்பட்ட ஐரோப்பாவில் உள்ள தேவாயலங்களில் இது முக்கியமானது. 
 
பரிசின் முதலாம் வட்டாரத்தின் 
2 Impasse Saint-Eustache முகவரியில் உள்ள இந்த தேவாலயத்துக்கு ஒருதடவையேனும் மறக்காமல் செல்லுங்கள். இங்குள்ள ஓவியங்களையும்... கட்டிட வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பம் உங்களை ஆச்சரியப்பட வைக்கும்!!

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்