Paristamil Navigation Paristamil advert login

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வினோத சாதனை படைத்த விஜய் சங்கர்

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வினோத சாதனை படைத்த விஜய் சங்கர்

1 சித்திரை 2025 செவ்வாய் 04:36 | பார்வைகள் : 873


ஐபிஎல் தொடரில், நேற்று கவுகாத்தி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதியது.

நாணய சுழற்சியில் வென்ற சென்னை அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் துடுப்பாட்டம் ஆடிய ராஜஸ்தான் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 182 ஓட்டங்கள் குவித்தது.

183 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் ஆடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 176 ரன்கள் மட்டுமே குவித்தது. இதனால் 6 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் தீபக் ஹூடாவிற்கு பதிலாக தமிழக வீரர் விஜய் சங்கர் களமிறங்கினார். 6 பந்துகளை எதிர்கொண்ட விஜய் சங்கர், ஒரு சிக்சருடன் 9 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இந்த போட்டியில் விளையாடியதன் மூலம், விஜய் சங்கர் வினோத சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

முன்னதாக, 2014 ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விஜய் சங்கர் விளையாடினார்.

அதன் பிறகு, ஹைதராபாத், டெல்லி, குஜராத் ஆகிய அணிக்காக விளையாடிய அவரை, இந்த ஐபிஎல் ஏலத்தில் சென்னை அணி ரூ.1.2 கோடிக்கு சென்னை அணி வாங்கியது.

இதே போல் 2008 முதல் 2015 ஆம் ஆண்டு வரை சென்னை அணிக்காக விளையாடிய ரவிச்சந்திரன் அஸ்வின், அதன் பின்னர் பஞ்சாப், டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட அணிகளுக்காக விளையாடி விட்டு தற்போது மீண்டு சென்னை அணிக்காக விளையாடி வருகிறார்.  

இதன் மூலம், நீண்ட நாள்களுக்கு பிறகு மீண்டும் சென்னை அணிக்காக விளையாடிய வீரர் என்ற சாதனையை அஸ்வின்(3,591 நாட்கள்) படைத்தார்.

தற்போது, 11 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை அணிக்காக விளையாடி விஜய் சங்கர்(3,974 நாட்கள்) அந்த சாதனையை தன்வசப்படுத்தியுள்ளார்.   

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்