பிரான்ஸ் அல்ஜீரியா உறவு - மீண்டும் புதுப்பிக்கப்படுகிறது...!!

1 சித்திரை 2025 செவ்வாய் 05:29 | பார்வைகள் : 3535
பிரான்ஸ் - அல்ஜீரியா நாடுகளுக்கிடையே இராஜதந்திர முறுகல் நிலை கடந்த பல மாதங்களாக நிலவி வந்த நிலையில், தற்போது இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் உறவு புதுப்பிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அல்ஜீரிய ஜனாதிபதி அப்தெல்மஜீத் தெபோனினை (Abdelmadjid Tebboune) தொலைபேசியில் அழைத்து உரையாடினார். பின்னர் இரு ஜனாதிபதிகளும் இணைந்த அறிக்கை ஒன்றினை வெளியிட்டனர். அதில் இருதரப்பு உறவுகளின் நிலை மற்றும் கடந்த சில மாதங்களில் நிலவிய பதட்டங்கள் குறித்து இரு ஜனாதிபதிகளும் நீண்ட, வெளிப்படையான மற்றும் நட்புரீதியான பரிமாற்றத்தைக் கொண்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான அனைத்து வகையான பிணக்குகளையும் உடனடியாக தீர்க்க வேண்டும் என அவர்கள் ஒப்புக்கொண்டதாகவும், இதன்மூலம் இரு நாடுகளுக்கிடையிலான தேவைகளை அடையமுடியும் எனவும் அவர்களுக்கிடையே வார்த்தை பரிமாற்றம் இடம்பெற்றதாகவும் எலிசே குறிப்பிட்டுள்ளது.