மரீன் லு பென் விவகாரம் : நீதிபதிகள் மீது குற்றச்சாட்டு.. நீதித்துறை அமைச்சர் கண்டனம்!!

1 சித்திரை 2025 செவ்வாய் 08:51 | பார்வைகள் : 3777
அரசியல் தலைவர் மரீன் லு பென்னுக்கு ஐந்தாண்டுகள் ‘தகுதியின்மை’ தண்டனை நேற்று மார்ச் 31, திங்கட்கிழமை வழங்கப்பட்டது. இதனால் 2027 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் அவர் பங்கேற்பது கேள்விக்குறியாகியுள்ளது.
இந்நிலையில், மரீன் லு பென் மீதான இந்த தீர்ப்புக்கு பல தரப்பில் இருந்து கண்டனங்கள் வலுத்து வருகிறது. நீதிபதிகள் மீது குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படுகின்றன. இந்நிலையில், நீதித்துறை அமைச்சர் Gérald Darmanin இது தொடர்பில் தெரிவிக்கையில், “பரிஸ் நீதிபதிகள் மீதான அச்சுறுத்தல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை” என தெரிவித்தார்.
மரீன் லு பென் மீதான தீர்ப்பினை எதிர்த்து மேல் முறையீடு செய்வதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். மேலும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு ஏற்ப மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும், “நான் நிரபராதி என்பதால் மேல் முறையீடு செய்வேன்” எனவும் அவர் தெரிவித்தார்.